உலக சாதனை நாயகனின் (காணொளி)

  இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று பகல்/இரவு ஆட்டமாக நடந்த வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.தொடக்க வீரர்களாக கௌதம் கம்பீரும்,விரேந்திர ஷேவாக்கும் களமிறங்கினார்கள்.ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய சேவாக் 140 பந்துகளை சந்தித்து 23 பவுண்டரிகள்,9 சிக்ஸ்சர்களுடன் 201 ரன்கள் குவித்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.
இந்த உலக சாதனையால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி பொங்க பட்டாசுகளையும் வெடித்து வருகின்றனர்.
தற்பொழுது கிரிக்கெட் வட்டாரத்தில் சேவாக் உலக நாயகனாக வலம் வருகிறார்.