நமதூர் அகல ரயில் பாதை பணியை விரைவாக செயல்படுத்த கோரி அதிரை நல்வாழ்வு பேரவையின் சார்பில் பல்வேறு அரசியல் தலைவர்கள் அமைச்சர்களை நேரில் சந்தித்து நமது நியாய கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர் .


கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தி.மு.க நாடாளமன்ற உறுப்பினர் K.விஜயன் அவர்களை சந்தித்து அகல ரயில் பாதை பணியை விரைந்து செயல்படுத்துமாறு கோரிக்கை வைத்தனர்.இதன் தொடர்ச்சியாக இன்று நமதூர் பேரூராட்சித் தலைவர் சகோ.S.H.அஸ்லம் அவர்கள் தலைமையில் 10 பேர் கொண்ட அதிரை வாசிகள் தஞ்சை வந்திருக்கும் மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி ஜி.கே.வாசன் அவர்களை சந்தித்து அதிரைக்கு அகல ரயில் பாதை பணியை விரைந்து செயல்படுத்துமாறு கோரிக்கை வைத்தனர்.இந்த சந்திப்பின் போது பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் N.R.ரங்கராஜன் M.L.A அவர்களும் உடனிருந்தார் .


சந்திப்பின் போது ஜி.கே.வாசன் அவர்கள் இந்த அதிரை வழித்தடம் மிகவும் முக்கியத்துவம் வாயிந்தது.இதனை கண்டிப்பாக நிறைவேற்றாமல் இருக்கும் ரயில்வே இலாகாவை தொடர்புகொண்டு தொடர்ந்து வலியுறுத்துவேன்.


ப.சிதம்பரத்தை சந்திக்க உள்ளதாக அவரிடம் பேசிவிட்டு விரைவில் M.L.A 
N.R.ரங்கராஜன் அவர்களிடம் சொல்கிறேன்.அதாவது இந்த பொங்கலில் அவரை சந்திக்க அனைத்து ஏற்பாடுகளையும் நான் செய்கிறேன் என்று முழு நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மத்திய உள்ளாட்சித் துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை எப்போது சந்திக்கலாம் என முடிவெடுத்து விரைவில் அறிவிக்க உள்ளதாக அதிரை நல்வாழ்வு பேரவையின் செயலாளர் தெரிவித்து உள்ளார்.