Hot Posts

6/recent/ticker-posts

தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை!


ஆயிரக்கணக்கான படகுகளும்,கட்டு மரங்களும் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 வங்க கடலில் உருவான தானே புயல் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று 2-வது நாளாக தமிழ்நாடு முழுவதும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
 
தமிழ் நாட்டின் வடபகுதியான பழவேற்காட்டில் இருந்து தென் பகுதியான தூத்துக்குடி வரை 1 லட்சம் பேர் மீன் பிடிக்க செல்லவில்லை.   பழவேற்காடு மற்றும் அதனையொட்டியுள்ள 30 குப்பத்தில் இருந்து 15 ஆயிரம் பேர் மீன்பிடிக்க செல்ல வில்லை. ஆரம்பாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் 10 ஆயிரம் பேர் மீன்பிடிக்கச் செல்ல வில்லை.
 
எண்ணூர், திருவொற்றியூரில் இருந்து 500 பேர் மீன் பிடிக்கச் செல்லவில்லை. ராயபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 25 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை. கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம் பகுதி மீனவர்கள் 5 ஆயிரம் பேர் மீன்பிடிக்கச் செல்ல வில்லை.
 
கடலூர், தேவனாம்பட்டினம் மீனவர்கள் 2 ஆயிரம் பேரும், நாகை, வேதாரண்யம், கோடியக்கரை, ஆறு காட்டுத்துறை, பூம்புகார், புஷ்பவனத்தில் மருந்து 6 ஆயிரம் பேரும், தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், அதிராம் பட்டினம், சேதுபாவாசத்திரத்தில் 2 ஆயிரம் பேரும், புதுக்கோட்டை மாவட்டம் மணல் மேல்குடி, கோட்டை பட்டினம், ஜெகதாப்பட்டி னம், மிமீசலில் 3 ஆயிரம் பேரும், ராமேசுவரம், மண்டபத்தில் 10 ஆயிரம் பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 2500 பேரும் மீன்பிடிக்கச் செல்ல வில்லை.