Hot Posts

6/recent/ticker-posts

அதிரையில் ஆரவாரத்துடன் நடந்து முடிந்த நெடுந்தூர ஓட்டப் போட்டி!!

அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய 2 ஆம் ஆண்டு நெடுந்தூர ஓட்டப் போட்டி இன்று காலை 6.30 மணிக்கு பொது மக்களின் ஆரவாரத்துடன் பேரூந்து  நிலையத்தில் டிரம்செட் வாத்தியங்களுடனும்,வெடிகளுடனும் களை கட்டியது.இந்த ஓட்டப் போட்டியில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்த ஓட்டப் போட்டியில் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் அதிக அளவு கலந்து கொண்டனர்.பாதுகாப்புக்கு போலீசாரும் நிறுத்தப்பட்டு இருந்தனர்.



 இந்த விழாவில் அதிரை முன்னாள் பேரூராட்சித் துணைத் தலைவர் திரு.இராமகுனசேகரன் அவர்களும்,A.அப்துல் அஜீஸ் சமூக ஆர்வலர் (அ.தி.மு.க) அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இன்று காலை சரியாக 8.30 மணிக்கு அதிரை பேரூராட்சித் தலைவர் சகோ.S.H.அஸ்லம் அவர்கள் கொடி அசைத்து போட்டியினை துவங்கி வைத்தார்.

சீறி பாயிந்து கொண்டு வீரர்கள் வெற்றி இலக்கை நோக்கி ஓடினார்கள்.அவர்களுக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள்.

இந்த போட்டிக்கு மருத்துவ உதவிக்காக அதிரை பைத்துல்மால், த.மு.மு.க, மற்றும் அரசு 108 சார்பாக ‘ஆம்புலன்ஸ் “ வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



  • இந்த போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்றவர் லோகநாதன் (கரிசல்காடு),வெற்றி கோப்பையும் வழங்கப்பட்டது.
  • இரண்டாவது பரிசை பெற்றவர் பிரபா (வெளிமடம்),
  • மூன்றாவது பரிசை பெற்றவர் ரஜினி (பேராவூரணி).
  • நான்காவது பரிசை பெற்றவர் பால சுப்பிரமணியன் (துவரங்குறிச்சி).



இந்த போட்டியில் சிறுவர்களுக்கும் பரிசுகள் அளிக்கப்பட்டது. 14 கிலோமீட்டர் எந்த சிறுவர்கள் செல்கிறார்களோ அந்த அனைத்து சிறுவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.


சிறுவரில் முதல் பரிசு பெற்றவர் அபூபக்கர் (வயது 8) அதிரை.

  • இரண்டாவது பரிசு பெற்றவர் அப்சர் (வயது 7) அதிரை.
  • மூன்றாவது பரிசு பெற்றவர் அசார் அலி (வயது 11) அதிரை. 

இந்த போட்டியில் வயதானவர்கள் அதாவது 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 இதில் 48 வயதான நாகூர் பிச்சை 14 கிலோ மீட்டர்கள் சற்றும் சளைக்காமல் ஓடி வெற்றி பெற்றார்.இதே போன்று 14 கிலோ மீட்டர் சென்று வந்த அனைவருக்கும் ஊக்கப்படுத்துவதற்காக பரிசுகள் வழங்கப்பட்டது.
 ---------------------------------------------------------------------------------------------------------------------
 பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை  விளையாட்டிலும் ஊக்கப்படுத்த வேண்டும்.
படிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல இது போன்ற விளையாட்டுகளுக்கும் (எந்த விளையாட்டாக இருந்தாலும்) முக்கியத்துவம் தர வேண்டும் என்பதே "அதிரை குரல்" வளைத்தலத்தின்  வேண்டுகோளாகும். 
------------------------------------------------------------------------------------------------------------------------
இதோ உங்களுக்காக நெடுந்தூர ஓட்டப் போட்டியின் புகைப்படங்கள்;
போட்டிக்காக வீரர்கள் தயாராகி நிற்கின்றனர்.


போட்டியை காண கடும் குளிரையும் பொருட்படுத்தாது வழி நெடுகிலும் உள்ள பொது மக்கள்.


வீரர்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது.


மருத்துவ உதவிக்காக வந்த 108 ஆம்புலன்ஸ்.

சீறி பாயிந்து செல்கிறார் ஒரு இளைஞர்.

இலக்கை நோக்கி ஓடும் வீரர்கள்.

சற்று நிதானத்துடன் ஓடும் சிறுவர் பட்டாளம்.


இப் போட்டியில் முதல் பரிசை தட்டி சென்ற நாயகன் லோகநாதன்.

2 வது பரிசை பெற்றவர் பிரபா.

3 வது பரிசை பெற்றவர் ரஜினி.