Hot Posts

6/recent/ticker-posts

நாளை தமிழக லாரிகள் கேரளாவுக்கு செல்லாது..



 முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து தமிழக எல்லையில் நாளை பொருளாதார முற்றுகை போராட்டம் நடக்கிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து கேரளாவுக்கு நாளை லாரிகளை இயக்க மாட்டோம் என்று என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.  மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி தெரிவித்துள்ளதாவது:
முல்லை பெரியாறு பிரச்னையில் தமிழர்களின் நலன் காக்கப்பட வேண்டும். கேரளாவிற்கு எதிராக நாளை நடைபெறும் முற்றுகை போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிக்கிறோம். இதனால் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு எந்த வழியாகவும் தமிழக லாரிகள் செல்லாது. இவ்வாறு நல்லதம்பி தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தினமும் ஆயிரத்துக்கும் அதிகமான லாரிகளில் முட்டை, பருப்பு, காய்கறி, இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. தமிழக லாரிகள் நாளை இயங்காததால் கேரளாவுக்கு நாளை இந்தப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவது முழுவதும் பாதிக்கும்.