தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
2012-13-ம் ஆண்டு பகுதி நேர பொறியியல் (பி.இ., பி.டெக்) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வருகிற 27-ந்தேதி முதல் மே மாதம் 18-ந்தேதி வரை வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்களை கோவை, சேலம், நெல்லை, பர்கூர், அரசினர் பொறியிற் கல்லூரிகள், காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆகியவற்றில் நேரடியாகவும், அஞ்சல் மூலமும் பெறலாம். ஜுன் மாதம் கலந்தாய்வு நடைபெறும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே மாதம் 18-ந்தேதிக்குள் குறிப்பிட்ட விலாசத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
Social Plugin