மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின்
தமிழக முதல்வராகப் பணிகளைத் தொடங்கிவிட்டார்.
இன்று பதவி ஏற்ற முதல்வர் முக,ஸ்டாலின் அவர்களுக்கு இந்தியயூனியன் முஸ்லிம்லீக் முதன்மை தலைவர் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துர் ரஹ்மான் வாழ்த்து தெரிவித்தனர்
தமிழக மக்களின் பலதரப்பட்ட குறைகளையும், அவர்களின் தேவைகளையும் நன்கு புரிந்துவைத்துள்ள அவரின் வீரியமிக்க செயல்பாடுகளின் தொடக்கமே அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்திருக்கிறது. சாமானிய மக்களின் மனநிலையை நன்கு புரிந்திருக்கும் ஒருவர்தான் அடித்தட்டு மக்களின் இதயங்களிலும் ஆழப் பதிந்திருக்க முடியும். அத்தகைய இயல்பான ஆற்றல் இவருக்குண்டு.
அனைத்து தரப்பு மக்களுக்குமான நல்ல, நேர்மையான முதல்வராக நிச்சயம் வாழ்ந்துகாட்டுவார் என எதிர்பார்ப்போம். அதற்குரிய எல்லா தகுதிகளும் அவருக்கு உண்டு.
மனம் திறந்து பாராட்டுவோம்; சாதிப்பார் என நம்புவோம். அதற்கேற்ப நாமும் சேர்ந்து பயணிப்போம். தமிழகம் தலைநிமிரும்; தமிழர்கள் பெருமிதம் கொள்வர். இன்ஷா அல்லாஹ்.
எம். அப்துல் ரஹ்மான் M.A., Ex MP.
மாநில முதன்மை துணைத் தலைவர்
Social Plugin