Hot Posts

6/recent/ticker-posts

வலுவிழக்கச் செய்யும் விபரீத போக்கு

    "அவ்வாறாயின் நீங்கள் தைரியத்தையிழந்து உங்கள் வலிமை குன்றி விடும். ஆகவே நீங்கள் துன்பங்களை சகித்து கொண்டு பொறுமையாக இருங்கள்".
                                                அல்குர் ஆண்(8;46 )
      ஒரு சமுதாயத்தின்,ஒரு குடும்பத்தின் உயர்வும் ,நலனும் ஒற்றுமையாக செயல்படுவதினாலேயே அமைத்துள்ளது எனலாம். ஆனால் இன்று தமிழக முஸ்லிம்களிடையே எத்தனை எத்தனை பிளவுகள்,தர்க்கங்கள் ,வீண் விவாதங்கள் சமுதாயத்தை நிலை குலையச்செய்துள்ள அவலத்தை பார்த்து வேதனையடையாமல் இருக்க இயலவில்லை. கடந்த புனித ரமளான் மாதத்தில் திருவிடைச்சேரி என்ற ஊரில் தொழுகையை பற்றிய வாக்குவாதத்தில் நோன்பு நோற்று பள்ளிவாசலில் தொழுது முடித்த இருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர் என்பது ஒற்றுமையின் கொடூர விளைவுக்கு ஒரு சான்று. எனவே தான் அருள்மிகு திருமறையின் அன்பால் அத்தியாயத்தில் அல்லாஹுக்கும்,அவன் தூதருக்கும் வழிபடுபவர்கள் தர்க்கம் செய்யதீர்கள் என்றும், அவ்வாறு செய்தால் வலுவிழந்து விடுவீர்கள் எனவும் எச்சரிக்கிறான்.
          இத்தகைய வீன்விவதங்கள் அபாயகரமான ஆயுதங்களாகும். துவேசங்களை பெருக்கி ஒற்றுமையை குலைப்பதால் முஸ்லிம் விரோத சக்திகள் உசுப்பப்படுகின்றன. நம்மை பற்றி இழிவாகவும்,ஏளனமாக பார்க்கவும், பேசவும் முற்படுகின்றனர். இத்தகைய சந்தர்பங்களில் பொறுமையையும், நிதானத்தையும் கடைபிடிக்க வீண்டியது அவசியமாகிறது. இத்தகைய பொறுமை சமூகம், அரசியல்,குடும்பம் என எல்லா நிலைகளிலும் பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும்.
        குடும்பத்தில் மாமியார், மருமகளிடத்திலும், நாத்தனார், அண்ணியார், பங்குதாரர்கள், பாத்தியத்தை கொண்டாடுபவர்களிடையிலும் தோன்றும் சண்டை சச்சரவின் போதும் பொறுமையோடும், நிதானத்தோடும் செயல்பட்டால் வெற்றி பொறுமையாலருக்கே என்பது அல்லாஹுவின் அழகிய போதனை. 'வலுவான சிறந்த சமுதாயத்தை உருவாக்க  அல்லாஹுவின் பாதையில் நாமனைவரும் உறுதியாகப் பாடுபடுவோம்.
    பேராசிரியை ஹாஜிமா கே.கமருன்னிசா  அப்துல்லாஹ்  M.A Bed..,