Hot Posts

6/recent/ticker-posts

ஸ்ரீ கருப்பர் கோவிலுக்கு 998000 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது, மேலும் மேல புலவன்காடு பொதி காத்தான் சாலையில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி மன்ற தலைவரின் அசத்தலான பணிகளை கண்டு ஊரே பாராட்டும் அற்புத தலைவர் சி, சதீஷ் குமார் அவர்கள்.

 பத்து  வருட கோரிக்கையான
செவ்வாய் கிழமை சந்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நான் வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆன பின்பு கொண்டு வரப்பட்டது.

 புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆன பின்பு
நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஊராட்சி பாத்தியப்பட்ட இடத்தில் நிரந்தரமாக செயல்பட திறக்கப்பட்டுள்ளது

வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆன பின்பு அனைத்து குடும்பங்களும் பொருளாதார சிக்கல் இந்த காலகட்டத்தில் அப்படி இருக்கும் பட்சத்தில் அரசை அணுகி மாவட்ட நிர்வாகத்தின் உதவியோடு நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் மூலமாக வரலாறு பேசும் விதமாக நம்முடைய ஊராட்சி பொது மக்களின் கடின உழைப்பின் பால்
அனைத்து வயல்வெளிகளிலும் பாசன நீர் செல்லக்கூடிய பாதைகள் மண் வரப்புகள் அனைத்தும் புனரமைக்கப் பட்டன அதன் மூலம் நம்முடைய விவசாயிகள் பயன் அடைந்தனர்.

 அடுத்த பணியாக ஊராட்சி முழுமைக்கும் மரக்கன்று நடும் திட்டத்தை 100 நாள் வேலைவாய்ப்பு பொதுமக்களை கொண்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது ,பொதுமக்களே பெருமையாக சொல்லும் அளவிற்கு தொடர்ந்து 100 நாள் வேலை பொதுமக்களுக்கு கிடைத்து கொண்டிருக்கிறது.

வளச்சேரி பட்டி கிராமத்திற்கு மாவட்ட சேர்மன் நிதியிலிருந்து 9 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய்க்கு ஆழ் குழாய்க் கிணறு மற்றும் பைப்லைன் 100 ஆண்டுகளுக்கு மேலாக போட முடியாத சாலையை நெருஞ்சி பட்டி ஊர் முழுவதற்கும் தார்சாலை பாலம் அமைக்கப்பட்டுள்ளது .

மேல மஞ்ச கரை கிராமத்திற்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இல்லாத ஊருக்கு மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது விரியணி பட்டி மற்றும் வளச்சேரி பட்டி கிராமத்திற்கு ஆள் துளைகிணறுஅமைக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி முழுமைக்கும் தெருவிளக்கே காணாத பகுதிகளில் எல்லாம் தெருவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது
ஊராட்சி முழுமைக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்த அனைத்து பகுதிகளுக்கும் புதிய பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது.

மேல மஞ்ச கரை ஆதிதிராவிடர் காலனி பலவருட மின்சார பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது மேல புலவன்காடு மற்றும் வளச்சேரி பட்டி கிராமங்களுக்கு பொது சுகாதார வளாகம் அமைத்து தரப்பட்டுள்ளது.

சுந்த நெறிப்படி கிராமத்திற்கு அங்கன்வாடிக்கு பத்தரை லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது, அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது பொன்னாங்கண்ணி பட்டி சந்தைப் பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

பொன்னாங்கண்ணி பட்டி
மயான சாலை அமைக்கப்பட்டது நேம்மெளி பட்டி ஆதிதிராவிடர் காலனி அமைக்கப்பட்டுள்ளது

நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக ஊராட்சியின் பல பகுதிகளுக்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது இன்னும் விடுபட்டுள்ள பகுதிகளுக்கு இன்னும் 6 மாத காலத்திற்குள் அனைத்து பகுதிகளுக்கும் புதிய தார் சாலை அமைக்கப்படும்

ஸ்ரீ கருப்பர் கோவிலுக்கு 998000 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது, மேலும் மேல புலவன்காடு பொதி காத்தான் சாலையில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மேல புலவன்காடு தண்டக்கார தெருவில் 100 மீட்டர் சிமென்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

இந்த ஆண்டு மேல மஞ்ச கரை ஆதிதிராவிடர் காலனியில் விடுபட்டுள்ள பகுதியில் 40 மீட்டர் சிமெண்ட் சாலை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

வாராப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் கிளாஸ் ,ஏகம் பவுண்டேஷன் மூலமாக 40 ஆயிரம் ரூபாய்க்கு புதிய கணினி வழங்கப்பட்டது.

அரசு உயர்நிலைப்பள்ளி தொடங்கி 20 ஆண்டு காலம் ஆகியுள்ளது நாம் வந்ததற்குப் பிறகு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் 100 மீட்டர் அளவிலும் ஊராட்சியின் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 400 மீட்டர் அளவிலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது இந்த ஆண்டு இறுதிக்குள் முழுவதுமாக கட்டி முடிக்கப்படும்

பலவருட கோரிக்கையான அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை சந்திக்க ப்பட்டுள்ளது தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று மிக விரைவில் மேல்நிலைப் பள்ளியாக மாற்ற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் மேலும் ஆதிதிராவிடர் தங்கும் விடுதியும் அமைப்பதற்கான பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல் மட்டுமே கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் ,புதுக்கோட்டையிலிருந்து வாராப்பூர் நெருஞ்சி பட்டி வளசேரிப்பட்டி வரை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய பேருந்து வசதி கேட்டு பெறப்பட்டது.


கலனி பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப தொடக்க பள்ளிக்கு 150 மீட்டர் சுற்று சுவர் அமைக்கப்பட உள்ளது

இன்னும் சில நாட்களில் மேல மஞ்ச கரை விரியணி பட்டி பொன்னாங்கண்ணி பட்டி பகுதியில் புதிய அங்கன்வாடி திறப்பதற்கான திட்டம் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு விரைவில் அரசின் அனுமதி கிடைக்க உள்ளது

இன்னும் சில நாட்களில் கலனி பட்டி விரியணி பட்டி மேல புலவன்காடு பகுதியில் புதிய பகுதிநேர நியாய விலை கடை அல்லது நடமாடும் நியாய விலை கடை திறப்பதற்கான திட்டம் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு விரைவில் அரசின் அனுமதி கிடைக்க உள்ளது

வளச்சேரி பட்டி ஆதிதிராவிடர் காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது

ஊராட்சி முழுமைக்கும் 18 மாலை நேர பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது

2011 ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை வீடு வேண்டி விண்ணப்பித்த அனைவருக்கும் வீடு பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது

தற்சமயம் 225 பொதுமக்களில் தகுதி வாய்ந்த பொது மக்களுக்கு வீடு வழங்கவும் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்கவும் அரசிடம் முறையாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது 
75 வீடுகள் தற்சமயம் வழங்கப்பட உள்ளது

முதற்கட்டமாக நெம்மேலி பட்டி புதுவயல் மேல மஞ்சகரை கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் அவர்கள் விரும்பக்கூடிய இடத்திலேயே குடிநீர் இணைப்பு வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது மற்ற கிராமங்களுக்கும் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது மேலும் அனைத்து ஊர்களிலும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் புதிய ஆழ்துளை கிணறுகள் என அனைத்தும் இன்னும் ஓர் ஆண்டுக்குள் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கழிப்பறை வேண்டி விண்ணப்பித்திருந்த அவர்களுக்கு கழிப்பறை வசதி வழங்கப்பட்டுள்ளது இன்னும் புதிய வீடு மற்றும் கழிப்பறை வேண்டி மனு பொதுமக்கள் அளித்துள்ளார்கள் அரசின் அறிவிப்பு வந்தவுடன் அவர்களுடைய ஆவணங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வரும் காலங்களில் அவர்களுக்கும் வீடு மற்றும் கழிப்பறை வசதிகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

5 க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறுதொழில் கடன் கிடைக்க உதவி செய்துள்ளோம் மேலும் பத்துக்கும் மேற்பட்ட சிறு தொழில் வழங்கப்பட்டுள்ளது


பொதுமக்கள் நேரடியாக ஊராட்சி மன்ற தலைவரை சந்திக்கும் வண்ணம் அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் தொலைபேசி எண்ணுடன் கூடிய நாட்காட்டி வழங்கப்பட்டது இதன் மூலம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்களை எவ்வித தங்கு தடையின்றி தொடர்பு கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது

முழுமைக்கும் உள்ள ஆயிரத்து 600 குடும்பத்திற்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கு மூன்று மரக்கன்றுகள் வீதம் 5000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது

ஊராட்சி முழுமைக்கும் புதிய நூலகங்கள் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்ற கிராமத்தில் பொதுமக்கள் முன்வந்து இடம் அளிக்க வருகிறார்களோ அனைத்து ஊர்களிலும் புதிய நூலகம் அமைக்கப்படும் அந்த நூலகத்தில் அரசு தேர்வுகள் குறித்த பயிற்சிகள் மற்றும் புத்தகங்கள் மற்றும் கணினி வசதிகள் படிப்படியாக செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இளைஞர்களின் வேண்டுகோளை ஏற்று கைப்பந்து மைதானம் அமைக்கப்பட்டுள்ளது இன்னும் பல்வேறு புதிய விளையாட்டு மைதானங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்கப்படும் அதற்கு இளைஞர்கள் ஒன்றிணைந்து ஊராட்சி மன்றத்தை அணுகினால் அனைத்தும் செய்து தரப்படும்

கழிப்பறை வழங்கப்படாத வர்களுக்கு மனு பெறப்பட்டு அவர்களுக்கும் அறிவுரை வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும்

துணைவட்டாட்சியர் அலுவலகம் வாராப்பூர்  ஊராட்சியில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி அதை மாற்றுவதற்கு எடுக்கப்பட்டு வருகிறது

பள்ளி மாணவ மாணவிகளுக்கு தங்கும் விடுதி கட்டிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

வாராப்பூர் ஊராட்சியில் வரலாற்றை உலகமெங்கும் கொண்டு சேர்க்கக் கூடிய அனைத்து செயல்களும் பணிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும்

உறுப்பினர் நிதியில் இருந்து 3 சோலார் மின் விளக்குகள் அமைக்க பட்டுள்ளது

வளச்சேரி பட்டி பழுதடைந்த தார்சாலை புதிய சாலை அமைக்கப்பட்டது

நெம்மேலி பட்டி பழுதடைந்த தார்சாலை புதிய சாலை அமைக்கப்பட்டது

ஊராட்சி முழுமைக்கும் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் அனைத்தும் புதியதாக போடப்பட்டுள்ளது

நெடுஞ்சாலைத்துறை சார்பாக 100 மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது

வளச்சேரி பட்டி பிள்ளையார் கோவில் சாலையில் 5 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட உள்ளது

காளி கோவிலுக்கு மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது

காளி கோவில் பட்டவன் கோவிலுக்கு தெருவிளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டது

ஊராட்சி முழுமைக்கும் பெருவாரியான இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது குளம் மற்றும் ஊரணிகள் சுற்றியும் நடப்பட்டு வருகிறது இன்னும் விடுபட்ட பகுதிகளில் மிக விரைவில் நடப்படும்

நிலத்தடி நீர் மட்டத்தை சீர்செய்யும் விதமாக 5 இடங்களில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது விடுபட்ட அனைத்து பகுதிகளிலும் ஊராட்சி முழுமைக்கும் தடுப்பணைகள் வருங்காலங்களில் அமைக்கப்படும்.

மழைநீரை பூமியில் செலுத்தும் விதமாக ஆழ்குழாய் கிணறு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் வரத்து வாரிகளில் 50 சோக் பீட் அமைக்க நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது

கால்நடை பயிற்சி பெற்ற 22 விவசாயிகளுக்கு ஆடு மாடு வளர்க்க கூடிய செட் வழங்கப்பட்டுள்ளது வரும் காலங்களில் இன்னும் பலருக்கு வழங்கப்பட உள்ளது.

வளச்சேரி பட்டி வாராப்பூர் சாலையில் மைனர் பிரிட்ஜ் அமைக்கப்பட உள்ளது இதற்கான நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

ஊராட்சி முழுமைக்கும் எங்களால் நடத்தப்படக்கூடிய விளையாட்டுப் போட்டிகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது

ஆண்கள் பெண்கள் சமத்துவம் வேறுபாடு இன்றி வாழ்ந்திட சமத்துவ பாலின கருத்தரங்கு நடத்தப்பட்டது

பட்டா மாற்றம் மற்றும் வருவாய் துறை சார்ந்த பயன்களை பொதுமக்கள் பெறும் வகையில் முகாம் அமைக்கப்பட்டது.

மருத்துவ முகாம் நடத்தப்பட்டது ரத்த தானம் வழங்கும் முகாம் நடத்தப்பட்டது

கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது

கிசான் கிரெடிட் கார்டு வழங்கும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது

வங்கி மூலம் சுய தொழில் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும்

தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட இலவச தையல் பயிற்சிக்கு ஊராட்சி மூலம் சில உதவிகள் வழங்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது அவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டது.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஊராட்சியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் டெஸ்க் பெஞ்ச் வழங்க கூடிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

நெம்மெளி பட்டி கிராமத்தில் 40 ஆண்டு கோரிக்கையான காலை வசதிக்கு ஊராட்சி முன்னின்று சர்வேயர் வைத்து அளந்து அத்து காண்பித்து தற்சமயம் மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது விரைவில் சிமெண்ட் சாலை அல்லது பேவர் பிளாக் அமைக்கப்பட உள்ளது

ஒன்றிய குழு உறுப்பினர் நிதியில் இருந்து நெரின்சி பட்டி பகவதி அம்மன் கோவிலுக்கு பேவர் பிளாக் சாலை அமைத்திட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

நெரின்சி பட்டி கிராமத்தில் எனது சொந்த நிதி மற்றும் நண்பர்கள் நிதி
1.25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் ஊரணி தூய்மை படுத்தப்பட்டு பொதுமக்கள் வழங்கப்பட்டது

100 நாள் வேலைவாய்ப்பு பணியாளர்கள் மூலமாக ஊராட்சி முன்வைக்கும் மரக்கன்று நடுதல் மண் வரப்பு அமைத்தல் நீர்வழிப் பாதைகள் சரிசெய்தல் சங்கம் பீட் அமைத்தல் போன்ற பணிகள் செய்யப்பட்டது

உயர் மின் அழுத்த பிரச்சினையை சரி செய்வதற்காக நெருஞ்சி பட்டி பொன்னாங்கண்ணி பட்டி கருப்பர் கோவில் விரியணி பட்டி வாராப்பூர் சிவன் கோவில் பின்புறம் என ஐந்து இடங்களில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டது

மேல மஞ்ச கரை கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது

விரியணி பட்டி கிராமத்திற்கு மழைக்காலங்களில் பழுதான மடை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது

கழனி பட்டி ராசாத்தி அம்மன் கோவிலுக்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது

அனைத்து குடும்பங்களுக்கும் தனிநபர்  குடிநீர் இணைப்பு கொடுக்கும் வண்ணம் ஆறு கிராமங்களில் ஆழ்குழாய் கிணறு மற்றும் தனிநபர் குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது அதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

புதுவயல் கிராமத்திற்கு நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது

சுந்தனேரிப்பட்டி வளச்சேரி பட்டி வாராப்பூர் கிராமங்களில் புதிய அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டு வருகிறது

கீழப்புலவன்காடு சுந்த நெறி பட்டி நெருஞ்சிப்பட்டி பொன்னாங்கண்ணி பட்டி கிராமங்களில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது

நெம்மேலி பட்டி கிராமத்தில் சமுதாய சுடுகாடு அமைக்கப்பட்டு வருகிறது

வளச்சேரி பட்டி கிராமத்தில் புதுக்கோட்டை ஒன்றிய அளவிலான நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளது

வளச்சேரி பட்டி கிராமத்தில் நெல் களம் அமைக்கப்பட உள்ளது

வாராப்பூர் ஸ்ரீ கருப்பர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சிவகங்கை ஊரணி மேம்பாடு செய்யப்பட உள்ளது

நெம்மேலி பட்டி வடக்கு தெரு சிமெண்ட் சாலை அமைக்கப்பட உள்ளது

வேளச்சேரி பட்டி அம்பாள் சமுத்திர மண் சாலை சிறிய பாலத்துடன் மெட்டல் சாலை யாக அமைக்கப்படுகிறது

பொன்னாங்கண்ணி பட்டி சுடுகாடிற்கு மண் சாலை சிறிய பாலத்துடன் மெட்டல் சாலை யாக அமைக்கப்படுகிறது

அரசு உயர்நிலைப்பள்ளி வாராப்பூர் மற்றும் ஆரம்பத் தொடக்கப்பள்ளி நெருஞ்சிப்பட்டி ஆரம்பம் தொடக்கப்பள்ளி கழனிப்பட்டி ஆரம்ப தொடக்கப்பள்ளி மேல மஞ்சக்கரை ஆகிய பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது

பொன்னாங்கண்ணி பட்டி ஆரம்ப தொடக்கப் பள்ளிக்கு பேவர் பிளாக் தரைதளம் அமைக்கப்பட்டு வருகிறது

பொன்னாங்கண்ணி பட்டி மற்றும் வாராப்பூர் வாராப்பூர் பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது

ஊராட்சி முழுமைக்கும் தடுப்பணைகள் அமைக்கப்பட்டு வருகிறது

மேலப்புலவன் காடு ஆதிதிராவிடர் காலனிக்கு புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது விடுபட்ட 16 கிராமங்களுக்கும் அனைத்து பணிகளும் குறிப்பாக விடுபட்டுள்ள தார் சாலைகள் விடுபட்ட கிராமங்களில் பொது சுகாதார வளாகம் மற்றும் தனிநபர் உறிஞ்சி குழி விடுபட்ட அனைவருக்கும் வீடு மற்றும் கழிப்பறை வசதி விடுபட்ட பகுதியில் மரக்கன்று நடுதல் விடுபட்ட அனைத்து கிராமங்களிலும் ஆழ்குழாய் கிணறு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி என அனைத்து திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கோப்புகள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் நடவடிக்கைக்காக நடைமுறையில் உள்ளது.

உங்களால் நான் உங்களுக்காகவே நான்
இப்படிக்கு உங்கள்
 பசுமைதேசம் சதீஷ்குமார் 
வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர்
9786564275