அதிராம்பட்டினத்தில் இலவச ஆயுர்வேத பொது மருத்துவ முகாம் ~ 250 பேர் பங்கேற்பு
அதிராம்பட்டினம், ஜன.26
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் மற்றும் மதுரை தன்வந்திரி ஆயுர்வேத வைத்தியசாலை இணைந்து இலவச ஆயுர்வேத பொது மருத்துவ முகாம் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு (வாய்க்கால் தெரு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் நடுத்தெரு (வாய்க்கால் தெரு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மாலதி, முன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் என்.எம் முஹமது ஹனீபா, தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் ஏ. அப்துல் காதர், அதிரை பேரூர் செயலர் வழக்குரைஞர் ஏ. முனாப், மாவட்ட ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹீமீது, துணைச் செயலாளர் எம்.கே.எம் அபூபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் தொடங்கி வைத்தார். முகாமில், மதுரை தன்வந்திரி வைத்தியசாலை ஆயுர்வேத மருத்துவர் என்.சண்முகப்பிரியா தலைமையிலான மருத்துவக்குழுவினர் பக்கவாதம், மூட்டுதேய்மானம், கழுத்துவலி, இடுப்பு வலி, தலைவலி, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.
மேலும் முகாமில், உடல் நாடி பரிசோதனை, உடல் எடை பரிசோதனை, மூலிகை ஆயில் மசாஜ் ஆகியன மேற்கொள்ளப்பட்டன. இதில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உட்பட 250 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். முகாம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை, 6 மணி வரை நடைபெற்றது.
தொடக்கத்தில், அக்கட்சியின் அதிரை பேரூர் பொருளாளர் கவிஞர் ஏ.ஷேக் அப்துல்லாஹ் வரவேற்றுப் பேசினார். முடிவில் மாவட்ட பிரதிநிதி எம்.ஆர் ஜமால் முகமது நன்றி கூறினார். இம்முகாமில் மதுரை தன்வந்திரி வைத்தியசாலை பொதுமேலாளர் ஏ.செந்தில் குமார், பள்ளி ஆசிரியர் டேவிட் ஆரோக்கியராஜ் உட்பட பலர் கலந்து கொண்டார்.
Social Plugin