Hot Posts

6/recent/ticker-posts

இளம் பெண்களின் இனிய வழி முறைகள்!! பாகம்:1

                                 ஆக்கம்,
நஜ்முதீன் (தீனியாத் ஆசிரியர்) காதிர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ,அதிரை.

அஸ்ஸலாமு அலைக்கும்...
ஆரம்ப காலத்தில் அரபு நாட்டுப் மக்கள் மிருகத்தை விட கேவலமாக வாழக்கை நடத்தி வந்ததையும் நபி(ஸல்) அவா;கள் நபித்துவம் பெற்று அம்மக்கள் மீது உழைப்பு செய்து  அந்த மக்களை புனிதர்களாக மாற்றினார்கள்.ஆரம்ப காலத்தில் அங்குள்ள பெண்கள் அடிமைகளாக இருந்தார்கள் மேலும் பெண் குழந்தை பிறந்தால் அக்குழந்தையை  உயிருடன் குழி தோண்டி அதனுள் புதைத்து வந்ததையும் நாம் அறியலாம்.

அங்கு வாழ்ந்த பெண்களுக்கு எந்த விதமான சுதந்திரமுல் இல்லாமல் வாழ்ந்து வந்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் பெண்கள் என்பவர்கள் கண்ணியமானவர்கள்  அவர்களுக்கு  பல உண்மைகள் உண்டு என்று பெரும் முயற்ச்சி எடுத்து பெரும் வெற்றிக் கொண்டார்கள்.
 
பெண் என்பவள் உயர்ந்த மானிக்கம் அதை முறையாக பயன் படுத்த சொன்னது இஸ்லாம் ஒன்றே!

இன்று எத்தனையோ மதங்களில் பெண்களை பற்றி தவறான கருத்துகள் பேசப்படுகிறது ஆனால் இஸ்லாம் அதை முறையாக பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு உரிய மரியாதையையும்,உரிய பதவியையும் இஸ்லாத்தில் வழங்கப்பட்டது அடிமைகள் போனறு; இருந்த பெண்களை அழகான இடத்தில் வைத்தது இஸ்லாம்!

அல்லாஹ் குர்ஆனில் பெண்களுக்கு என்று பல சூராக்களை அமைத்து வைத்துள்ளான். சூரா அண்ணிஸா சூரா அல்நூர் சூரா அஹ்ஸாப் இன்னும் பல இடங்களில் குறிப்பிட்டு கான்பித்துள்ளான்.
4:124. ஆகவே, ஆணாயினும் சரி  பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். 

49:13 .மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண் பெண் குழந்தை பிறந்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.

பெண்ணிடத்தில் தீன் இருந்தாள் அந்த குடும்பத்தில் தீன் இஸ்லாம் நிலைத்து நிற்க்கும். 

எனவே இன்றைய இஸ்லாமியப் பெண் சமுதாயம் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிற பெண்கள் அல்லாஹ் நபி(ஸல்)அவா;களின் வழி காட்டுதல் பெயரால் நாம் வாழ்ந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

இஸ்லாம் நபி (ஸல்) அவர்கள் வருகை முன்பு  பெண் குழந்தைகள் பெருவதைப் பெரும் கேவலமாகப் கருதினாh;கள் பெண் குழந்தைகள் வளர்த்து வந்த பிறகு அவர்களை  ஊருக்கு வெளியே அழைத்துக்  கொன்டு குழியைத் தொண்டி அதில் அவர்களை  இறக்கி அவர்களை கதற கதற மண்ணைப் போட்டு மூடிக் கொள்ளும்  வழக்கம் அரபிகளிடம் இருந்து வந்தது. 

மேலும் மற்ற நாடுகளிலும்  பெண்களை கேவலமாக கருதி வந்தார்கள்.ரோம்,  எகிப்து,பாரசீகம், சீனா, ரோமா;கள், பெண்களை மற்ற இனமாக கருதி வந்தார்கள்.கிரேக்கர்கள்  பெண்களை ஷைத்தான் என்று கருதினார்கள்.
 
16:58 .அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்.
பிறந்த பெண் குழந்தைக்கு எருக்கம் பால் கள்ளிப் பால் போன்ற விஷயங்களை கொடுத்தும் பெண் குழந்தைகளை கொலை செய்து வந்தாh;கள் மேலும் தமிழ் நாட்டில் பல இடங்களில் நடைபெற்று வருகிறது பேராசிhpயா; அப்துஸ் ஸமத் அவர்கள் இஸ்லாத்தின் மனித மதிப்பு என்ற நூலின் ஒரு கருத்தை கூறுகிறாh;

திருநெல்வேலியில் ஒரு ஸ்கேன் சென்றால்எழுதப்பட்ட வாசகம் இன்று நீங்கள் 500 ரூபாய் செலவு செய்யத் தயங்கினால் இருபது வருடங்களுக்கு பிறகு 10 லட்சம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.இவ்வாசகம் என்ன சொல்கிறது கருவில் இருப்பது ஆணா? அல்லது பெண்ணா? என்று அறிய ஸ்கேன் பாருங்கள் என்று கூறுகிறது. இன்று நவீன காலத்தில் நம் வாழ்கிறோம் என்று பெருமையாக கூறுகிறோம் ஆனால் என்ன நடைபெறுகிறது சிந்தியுங்கள்!

81:8 .உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படுநம் போது- 81:9 .''எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?”” என்று- 
17:31 .நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.

1432 வருடங்களுக்கு முன்பு பாவம் செய்வதை பெருமையாக கருதிய வந்தாh;கனள் இது போன்ற வசனங்கள் மூலம் பெண் குழந்தைகளை கொல்லும் பொடியவா;களுக்கு அச்சமூட்டி எச்சாpக்கை செய்து பெண்கள் சாகப் பறந்தவா;கள் அல்ல! பெண்கள் சாதிக்கப் பிறந்தவா;கள் என்பதை இஸ்லாம் 
இஸ்லாம் வருகை முன்பு பெண்களின் மறுமணம் 
கணவன் இறந்த விவாகரத்து செய்யப்பட்ட  பெண்ணுக்கு மறுமணம் செய்வது அன்றை காலத்திலும் பெரும் சுமையாக கருதி வந்தாh;கள் நமது இந்திய நாட்டின் பழக்க வழக்கதிலும் இருந்து வருகிறது புல்லானாலும் புருஷன் கல்லானாலும் கணவன் கணவனே கண் கண்ட தெய்வம் என்றும் பண்பாடாக போதிக்கப்பட்டு வந்தது இதனால் தான் கணவன் இருந்து விட்டால் அவரது உடலுக்குஅ மூட்டப்பட்ட நெருப்பில் மணைவி விழுந்து உயிரை மாயிந்துக் கொள்வாள் 
ஆன்றைய அரபி மக்களிடம் விதவைகள் வாழ்வதை தகுதியற்றவா;களாக கருதி வந்ததா;கள் எந்த நல்ல காhpயங்களுக்கும் விதவைகள் முன் வருவதை அபசகுனமாக கருதப்பட்டனா; ஒரு ஆண் மனைவியை இழந்தால் மறுமணம் செய்து கொள்ளலாம் ஆனால் ஒரு பெண் கணவரை இழந்தால் மறுமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற பழக்க வழ்க்கம் அன்றைய அரபு மக்களிடத்தில் இருந்து வந்தது 
நபி(ஸல்) அவா;களின் மனைவிமாh;கள் ஆயிஷா (ரலி) அவா;களைத் தவிர மற்ற மனைவிமாh;கள் அனைவருமே விதவைப் பெண்களே! 
இஸ்லாம் வருவதற்கு முன்பு பெண்களின் நிலமைகள்!

1.பெண்களின் பிறப்பை இனச் செயல் என்று கருதுதல்
2.பெண்களுக்கு சொத்துhpமை நிராகாpத்தல்
3.பெண்களை தவறான முறையில் பயன்படுத்துதல்(விபச்சாரம்)
4.மஹா; தொகையை நிராகாpத்தல்
5.திருமணத்திற்னு முன்பு பெண்ணின் சம்மதத்தை பெற தேவையில்லை
6.கணவா; இறந்து விட்டால் மறுமணம் செய்யக்கூடாது
7.கணவா; இறந்துவிட்டால் தண்ணை அழுகு படுத்தக்கூடாது
8.கணவா; இழந்த பெண்களை மக்கள் ஒதுக்கி வைத்தாh;கள்
9.பெண் குழந்தை பிறந்தால் தன்னுடைய கையால் கொலை செய்தாh;கள் 
10.பெண்களுக்கும் கல்வி இல்லை என்று ஒதுக்கினாh;கள்


இஸ்லாம் வந்த பிறகு  பெண்களின் நிலமைகள்!

1.பெண்கள் பிறப்பதை சுபச் செய்தி எனக் கூறுதல்
2.சொத்துகளில் பெண்களுக்கும் உhpமை உன்டு.
3.பெண் சிசுவை கொலை செய்வது மிகப் பொpய பாவச் செயல்
4.அடுத்த பெண்களை தவறான முறையில் பாh;பது மிகப் பொpய பாவச் செயல்
5.மஹா; தொகை உhpமை உண்டு
6.திருமணத்திற்கு முன்பு சம்மதம் பெறுதல்
7.குல்வு என்ற முறையில் கணவனை விட்டு நீங்கிக் கொள்ளுதல்
8.கணவன் துனையுடன் வெளியே செல்லுவது
9.கணவன் இறந்த பிறகு மறு திருமணம் செய்து கொள்ளுதல்
10.பெண் குழந்தை முறையாக வளா;த்தால் அந்த பெற்றோh;களுக்கு சுவனம் இருக்கிறது.

             இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் தொடரும்.....
இணைந்திருங்கள் "அதிரை குரல்" ல்..