Hot Posts

6/recent/ticker-posts

கேரள மாநிலம் கோழிக்கோடு ...இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகமான லீக் ஹவுஸில் தேசிய அளவிலான அரசியல் ஆலோசனைக் குழு கூட்டம்: ராத்தா ஃபாத்திமா முஸபர் மாநில மகளர் அணியின் தலைவியாக தேர்வு



இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வருகைதந்த தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் தேசிய அளவிலான பலதரப்பட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. 

சமுதாயம் சந்திக்கும் பல்வேறு சவால்களையும், ஏழை எளிய மக்கள் அடைந்திடும் வேதனைகளையும், தேசம் எதிர்நோக்கிடும் சோதனைகளையும் கடந்து, நாடு நலம் பெறவும் நாட்டு மக்கள் வளம் பெறவும் வல்ல இறைவனை வேண்டுவோம்; உள்ள உறுதியுடன் பணியாற்றுவோம்; ஒற்றுமையுடன் அனைவரையும் அரவணைத்து பயணிப்போம் என பேசப்பட்டது

இந்த கூட்டத்தில் இந்திய யூனியன்முஸ்லிம் லீக் மகளிருக்கான அமைப்பான உமன்ஸ்லீக் தேசிய தலைவியாக  சந்தனத்தமிழறிஞர் சிராஜுல்மில்லத் அ.கா.அ.அப்துஸ்ஸமது அவர்களுடைய புதல்வி சகோதரி பாத்திமா முஸபர் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்

தேர்வு செய்யப்பட்ட ராத்தா எல்லாவிதமான நலம், வளம் பெற துஆ  செய்கிறேன் என்று அதிராம்பட்டினம் நகர  சாகுல் ஹமீது, வாழ்த்துகளை டெலிபோன் மூலம் தெரிவித்தனர்