இஸ்லாத்தில் சாதிப்பிரிவோ, பாகுபாடோ கிடையாது
10 சதவீத இடஒதுக்கீடு வேண்டுமென்பதே முஸ்லிம்களின் கோரிக்கை
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி
திருச்சி, அக்.12-
இஸ்லாத்தில் சாதி பாகுபாடோ, சாதிய பிரிவுகளோ கிடையாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத்தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப் பிட்டுள்ளார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின் 1950-ம் ஆண்டு ஆகஸ்டு 10- ம்தேதி, இந்திய குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் வெளியிட்ட உத்தரவில், ‘இந்து சமயத்தை பின்பற்றாத எந்த ஒரு தாழ்த்தப்பட்டோரும் எஸ்.சி. பட்டியலில் இடம் பெறவோ, அதன் சலுகைகளை அனுபவிக்கவோ முடியாது என குறிப்பிட்டிருந்தார்.
இதனை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களை தொடர்ந்து 1956-ம் ஆண்டு சீக்கிய மதத்தைச் சார்ந்த தலித்களும், 1990-ம் ஆண்டு பவுத்த மதத்தைச் சார்ந்த தலித்களும் எஸ்சி. பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால், கிறிஸ்தவ மதத் திற்கு மதம் மாறிய தலித்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க அரசு மறுத்து வருவதோடு எஸ்.சி.களுக்கான சலுகைகளை யும் புறக்கணித்து வருகிறது.
முற்படுத்தப்பட்ட சமூகங் களைச் சார்ந்தவர்கள் இஸ்லாத் தில் இணையும் போது அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்படுகின்ற னர்.
அதேசமயம், தாழ்த்தப் பட்ட சமூகங்களை சார்ந்தவர் கள் இஸ்லாத்தில் இணையும் போது மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்னமும், ‘இஸ்லாத்திற்கு மதம் மாறியோர்’ என்றே சான்ற ளிக்கப்படுகிறது. அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் என்று சான்றளிக்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.
இதனிடையே, இந்து அல்லாத தலித்துகள் எஸ்.சி. பட்டியலில் இடம் பெற முடியாது என்று குடியரசுத் தலைவர் அறிவித்த ஆகஸ்ட். 10-ஐ கிறிஸ்தவ தலித்கள் கருப்பு நாளாக அனுஷ்டித்தனர்.
இதையொட்டி, சென்னை யில் மயிலை உயர் மறை மாவட்ட தாழ்த்தப்பட்டோர் எஸ்.டி பணிக்குழு, சமூக நீதி அமைதி வளர்ச்சி பணிக்குழு சார்பில் சென்னை சாந்தோம் பேராலய வளாகத்தில் கருப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதற்கு தலைமை தாங்கிய சென்னை ஆர்ஷ் பிஷப் ஜார்ஜ் அந்தோணி சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘இந்திய அரசியல் சாசனத் தின் ஆணை 1950-ல் உள்ள 3-வது பத்தியை நீக்கி விட்டு, தலித் கிறிஸ்தவர்களுக்கு மட்டு மின்றி, தலித் முஸ்லிம்களுக்கும் தாழ்த்தப்பட்டோர் வகுப்பின ருக்கான சலுகைகளை அளிக்க வேண்டும்‘ என குறிப்பிட்டிருந் தார்.
அவரது இந்த கருத்திற்கு முஸ்லிம்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவரு மான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர் களிடம் கூறியதாவது-
ஒருவர் முஸ்லிமாக மாறினால் அவர் இஸ்லாம் எனும் பெரும் சமுத்திரத்தில் ஓர் அங்கமாக மாறி விடுகிறார். இஸ்லாத்தில் சாதியும் கிடை யாது, சாதி அடிப்படையிலான பாரபட்சமும் கிடையாது.
இந்தியா முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் பொருளாதார, கல்வி மற்றும் சமூக அந்தஸ்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பின ராக கருதப்படுகின்றனர்.
இஸ்லாத்திற்கு மாறும் தலித்களை தாழ்த்தப் பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு ஏற்றுக் கொண்டால் இஸ்லாத்தில் சாதி உள்ளதாக ஒப்புக் கொண்டதாக ஆகி விடும்.
இந்தியாவில் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பின ராக கருதப்படுகின்றனர்.
அரசியல் சாசனத்தின்படி மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஏற்றுக் கொள் ளப்பட மாட்டாது என்பதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க கோரினோம்.
மத்திய அரசை பொறுத்த வரையில், லெப்பை, தக்னீ, மாப்பிள்ளை மற்றும் தூதேகுலா ஆகிய நான்கு பிரிவுகளையும் தமிழக அரசைப் பொறுத்தவரையில் மேற்கண்ட 4 பிரிவுகளோடு செய்யது, ஷேக், அன்சர் ஆகிய மூன்று பிரிவுகளையும் சேர்த்து பிற் படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் முஸ்லிம் களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 3. 5 சதவீத தனி உள் இடஒதுக்கீடு வழங்கப்பட் டுள்ளது.
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின்படி,இந்தியாவில் முஸ்லிம் களுக்கு பிரத்தியேக மாக 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் கோரிக்கை.
இவ்வாறு பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
Social Plugin