Hot Posts

6/recent/ticker-posts

ஜித்தா அய்டா தலைவர் ராபியாகூட நேர்காணல்

ஜித்தா அய்டா சேவை அமைப்பின் தலைவர் ராஃபியா - நேர்காணல் ! [ வீடியோ ]

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ராஃபியா. சவூதி ஜித்தா நகரில் கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். 'ராஃபியா' என அனைவராலும் அழைக்கப்படும் இவர் பன்மொழி பேசும் திறன்கொண்டவர். நகைச்சுவையுடன் தன் கருத்தை அடுக்கு மொழியில் அழகாக எடுத்துரைப்பது இவரின் தனிச்சிறப்பு.

பல்வேறு சேவை அமைப்புகளில் நிர்வாகியாக தொடர்ந்து பல்வேறு சமுக சேவை ஆற்றிவருகிறார். ஜித்தா தமிழ் சங்கம் நிறுவனர். சவூதி இந்திய தூதரகத்துடன் நெருங்கிய தொடர்பு, அதிரை பைத்துல்மாலின் ஓவர்சீஸ் பிரதிநிதி, அய்டா சேவை அமைப்பின் தலைவர், மெப்கோ பொது நிதி கல்வி நிறுவனத்தின் துணைத்தலைவர் உள்ளிட்ட பொறுப்பில் உள்ளார். சமுதாய அமைப்புகளின் தலைவர்களோடு நல்ல தொடர்பில் உள்ளார்.

சரி விசயத்திற்கு வருவோம்...
அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள், சேவையாளர்கள், கல்வியாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் சேவைகளை ஊக்கப்படுத்தும் விதமாக அதிரை நியூஸ் இணையதளம் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் சவூதி ஜித்தா அய்டா சேவை அமைப்பின் தலைவர் ராஃபியா அவர்களை நேரில் சந்தித்து, அய்டா ஆற்றி வரும் சமுதாயச் சேவைகள், மந்தமாக நடந்து வரும் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப் பணியை துரிதப்படுத்த அய்டாவின் பங்களிப்பு, இந்திய தூதரகம் மூலம் சவூதி வாழ் இந்தியர்களுக்கு ஆற்றி வரும் சேவைகள் உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்து அதிரை நியூஸ் சார்பில் அணுகினோம்.

கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள புறப்பட தயாராக இருந்தவர் நமக்காக தனது நேரத்தை ஒதுக்கி ஆர்வத்துடன் தந்த பதில் இதோ காணொளி வடிவில்.... 

நன்றி:
அதிரைநீயூஸ்