வங்கதேச தலைநகர் டாக்காவில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான். இதன்மூலம் உலகக் கோப்பையின் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது பாகிஸ்தான். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது பாகிஸ்தான்.
முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 43.3 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 20.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 113 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
இந்த உலகக் கோப்பையில் இரண்டு முறை 5 விக்கெட்டுகள், இரண்டு முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மொத்தம் 21 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார் அப்ரிதி. இவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் ஜாகீர்கான் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Social Plugin