அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி கோடை கால விடுமுறைக்குப்பின் கடந்த 15.06.2011அன்று பள்ளி மறு திறப்பு நடைப்பெற்றது.
பள்ளியை துப்புரவு தொழிலாளி பள்ளியின் கழிப்பிடத்தை சுத்தம் செய்ய சென்றபோது அங்கு தடுப்பு சுவர்கள் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.
மேலும் இப்பள்ளியின் இருளை பயன்படுத்தி இங்கு இரவு நேரங்களில் விபச்சாரம் போன்ற சட்டவிரோத செயல்களை அரங்கேற்றம் செய்தும் வந்துள்ளனர் இதற்க்கு ஆதாரமாக ஏராளமான உபயோகித்த ஆணுறைகள் பள்ளி வளாகத்தில் காணக்கிடைத்தன.என இப் பள்ளியின் தலைமையாசிரியை கூறினார்.
இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஹனிபா சார் ,அஜ்மீர் ஸ்டோர் ஷாகுல் ஹமீது ஆகிய இருவரும் நம்மிடம் கூறும் பொழுது இப்பிரச்சனையை சட்டப்படி அணுக உள்ளதாக கூறினார்கள்.
எனவே இப்பிரச்சனையை சம்பத்தப்பட்ட அதிகாரிகள்,பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் துரித நடவடிக்கையில் ஈடுபட்டு மேற்கண்ட பிரச்னைக்கு முற்றுபுள்ளி வைக்க இப்பகுதி பொதுமக்கள் கேட்டு கொள்கிறார்கள் .
( முன்பு பதியப்பட்டிருந்த படம் வாசகர்களின் வேண்டுகோளுக்கு இனங்க நீக்கப்பட்டுள்ளது )
Social Plugin