அஸ்ஸலாமு அழைக்கும்..
- இன்றைய நிலையில் இஸ்லாமிய மார்கத்தை மற்றவர்கள் ஏளனமாக பார்கின்றனர்.ஏன் என்று கேட்கின்றீர்களா?
இஸ்லாமிய மார்கத்தில் சில குளறுபடிகளை செய்து வருகிறார்கள் நம் சகோதரர்கள்.உண்மையாக சொல்ல வேண்டுமானால் (குர்ஆனில் ) என்ன உள்ளதோ,அல்லாஹ்வின் இறைத்தூதர் நாயகம் முஹம்மத் நபி (ஸல்) என்ன சொல்லி இருக்கின்றார்களோ அதனை தான் நாம் பின்பற்ற வேண்டும்.இதனை விட்டு புதிதாக வந்த ஹதீஸை கொண்டு வந்து இஸ்லாமிய மக்களை குழப்பி கொண்டிருக்கின்றனர்.புதிதாக வந்த ஹதீஸில் கூட்டு துஅ ஓத கூடாது,மௌலீது ஓத கூடாது,தொழுகையின் இருப்பில் விரல் அசைக்க வேண்டும்,புஹாரி ஷரீப் ஓத கூடாது, என்று பல பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.இதைப்பற்றி பேச இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது?
இதனை பல மக்களும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.இவை அனைத்தும் இஸ்லாமிய மார்கத்திற்கு புறம்பானது.
இது மட்டுமல்லாமல் உலமாக்களையும் தவறாக பேசி வருகின்றனர்.
இதனை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான்.
குறிப்பாக சொல்லப்போனால் அதிரையில் இது பெரும்பாலும் நடை பெற்று கொண்டுதான் இருக்கின்றது.
இதனை (பெண்களும்) நம்பி வீட்டில் உள்ள (ஆண்களிடம்) இப்படி தான் மார்க்கம் நமக்கு சொல்கிறது என்கின்றனர்.இதனால் வீட்டிலும் பிரச்சனை ஏற்படுகிறது. சிலர் இதனை போலியான மார்க்கம் என்கின்றனர்.(நவூதுபில்லாஹ்)..
இவர்கள் செய்யும் இந்த வீண் செயலால் நமது மார்கத்திற்கு கெட்ட பெயர் உருவாகும் நிலை ஏற்படுகிறது.அல்லாஹ் பாதுகாப்பானாக.
மார்க்கத்தை குழப்பி கொண்டிருப்பவர்களுக்கு நாம் ஒரு போதும் அடிபணியக் கூடாது.
- நமக்கு நபி (ஸல்) அவர்கள் என்ன கற்று தந்தார்களோ அதனையே நாமும் பின்பற்றி ஈருலகத்தில் வெற்றி பெறுகின்ற நல்லோர்களாக அல்லாஹ் நம்மை எல்லாம் ஆக்கி அருள்வானாக...
ஆமீன்!
Social Plugin