Hot Posts

6/recent/ticker-posts

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சோதனை காலம்..!

   


   பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் (இன்ஜமாம் உல் ஹக்), தற்போது தனக்கும் கிரிக்கெட்டிற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும் ஆட்டத்தின் மீதான ஆர்வம் மங்கி விட்டது என்றும் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்காக 120 டெஸ்ட் போட்டிகளிலும் 378 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் விளையாடிய இன்ஜமாம், தற்போது கிரிக்கெட் பற்றி கவலைப்படுவதில்லை என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் எந்த வித பங்காற்றவும் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் தோல்விகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இன்ஜமாம் உல் ஹக், "நான் இப்போது ஓய்வு பெற்றுவிட்டேன், என்னுடைய கட்டுமானத் தொழிலை கவனிப்பதற்கே நேரம் சரியாக உள்ளது. பொதுவாகவே நான் கிரிக்கெட்டைப் பின் தொடர்வதில்லை. கிரிக்கெட் ஆட்டத்தின் மீதான என் ஆர்வம் மங்கி விட்டது" என்றார்.
ஜாவேத் மியாண்டாடிற்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராகத் திகழும் இன்ஜமாம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தற்போதைய நிலை தனக்கு என்னவென்றே தெரியாது என்றார்.


மேலும் இன்ஜமாம் கூறியதாவது;
   அப்ரிடி அணிக்கு கேப்டன் ஆக பணியாற்றிய காலத்தில் பாகிஸ்தான் அணி சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.ஆனால்,"பாகிஸ்தான் அணி தற்பொழுது எந்த நிலையில் உள்ளது என்றே தெரியவில்லை.எனக்கு ஜிம்பாப்வே அணியைப் பற்றித் தெரியாது, மேலும் பாகிஸ்தான் அணியில் அதிகமாக புது முக வீரர்கள் உள்ளனர். இவர்களையும் எனக்குத் தெரியாது இதில் அவர்களைப்பற்றி கருத்துக் கூறுவதில் என்ன பயன் உள்ளது?
 கிரிக்கெட் வாரியத்துடன் எந்த வித தொடர்பும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை, நான் பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு ஏற்கனவே சேவையாற்றியுள்ளேன், என்று கூறுகிறார் இன்ஜமாம்