Hot Posts

6/recent/ticker-posts

40 வருட சரித்திரம் சரிந்தது..!!

     

     அதிரையில் கடந்த நாட்களாக உள்ளாட்சித் தேர்தல் மிகவும் சூடு பிடித்து வந்தது.
அதிரை பேரூராட்சி தலைவர் பதவிக்கு மொத்தம் 12 போட்டியிட்டனர்.இதில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட S.H.அஸ்லம் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதில் முக்கியமானது என்னவென்றால் தொடர்ந்து 40 வருடங்களாக அதிரை பேரூராட்சி கோட்டையை தன் வசம் இறுகப் பற்றி பிடித்துகொண்ட காங்கிரசின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.இந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசிற்கு 3 வது இடம் கிடைத்துள்ளது.அதிரையில் காங்கிரசின் ஆட்சி காலத்தில் சில,பல சேவைகள் செய்தாலும் மக்கள் அனைவரும் மாற்றத்தையே விரும்பியுள்ளனர் என்பதை இந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகளிலேயே தெரிந்து கொள்ளலாம்.
  அதிரை உள்ளாட்சித் தேர்தலில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு காங்கிரஸ் சார்பாக M.M.S.பஷீர் போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சேர்மன் பதவிக்கு அதிரை மக்களால்  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள S.H.அஸ்லம் தனது பணியினை சிறப்புடன் செய்வார் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். 
தொடர்ந்து 40 வருட காங்கிரசின் ஆட்சி சரித்திரம் சரிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.