நடை பெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிரை பொது மக்கள் வாக்களிக்க ஆர்வமாக உள்ளனர்.பேரூராட்சி தலைவர் பதவிக்கு சுமார் 10 க்கும் மேற்ப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதிரைக்கு பல நல்ல சேவைகளை கொண்டு வருவதாக வேட்பாளர்கள் பலரும் அறிவித்து உள்ளனர்.
இதனால் அதிரை வாழ் பொது மக்களிடையே இந்த உள்ளாட்சி தேர்தல் பேரு வரவேற்ப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று.
உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்களின் பிரச்சாரங்களும் சூடு பிடித்துள்ளன.
அதிரையில் மழை பெய்து வந்தாலும் வேட்பாளர்கள் அதனை பொருட்படுத்தாமல் வாக்குகள் சேகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Social Plugin