Hot Posts

6/recent/ticker-posts

சந்தோசமாக கொண்டாடுவோம்!!

      

  அஸ்ஸலாமு அலைக்கும்.
"அதிரை குரல்" சார்பாக புனிதமிக்க (ஹஜ்ஜு பெருநாள்) நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
   அன்பார்ந்த அதிரை நகர சகோதர,சகோதரிகளே நாமெல்லாம் இந்த புனிதமிக்க துல் ஹஜ் மாதத்தின் பிறை 9 அன்று அரஃபாவுடைய நோன்பினை நோற்று பிறை 10 அன்று புனித மிக்க ஹஜ்ஜு பெருநாளை கொண்டாட உள்ளோம்.
இந்த தினத்தில் நாம் ஆடம்பரங்களை தவிர்த்து அல்லாஹுக்கு பொருத்தமான முறையில் நாம் இந்த புனிதமிக்க ஹஜ்ஜு பெருநாளை சந்தோசமாக கொண்டாட வேண்டும்.


குறிப்பாக பெண்களுக்கு;
         இந்த தினத்தில் அனைவரும் புத்தாடை அணிந்து,தொழுதுவிட்டு  தங்களது மகிழ்ச்சிகளை உறவினர்களிடமும்,நண்பர்களிடமும் தெரிவித்து கொண்டிருப்பார்கள்.பெண்கள் தாங்கள் அணிந்த உடையை மற்றவர்களிடம் பெருமை பேசி கொண்டிருப்பது வழக்கம்.இதனை பெண்கள் தவிர்த்து கொள்வது நல்லது.இந்த புனித மிக்க தினத்தில் வீண் பேச்சுக்களை விட்டு விலகி இருப்பது நல்லது.
இந்த நன் நாளில் இறைவனின் பொருத்தத்தை பெற்று ஈருலகில் வெற்றி பெறுகின்ற நல்லோர்களாக நம்மையெல்லாம் அல்லாஹ் ஆக்கி அருள்வானாக.!
                    ஆக்கம்,
              அதிரை குரல்,
          S.அப்துல் வஹாப்.