வடமாநிலங்களில் கடும் பனி நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பனிமூட்டம் அதிகமாக உள்ளதால் பல இடங்களில் ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் கடும் பனிக்கு மேலும் 9 பேர் பலியாகி உள்ளனர். ஆஸம்கர், பிரதாப்கர் ஆகிய இடங்களில் தலா 3 பேர், பாலியாவில் 2 பேர், பல்ராம்பூரில் ஒருவர் என 9 பேர் நேற்று இறந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. கோரக்பூர், பைசாபாத், லக்னோ உள்பட முக்கிய நகரங்கள் பனிமூட்டத்தால் ஸ்தம்பித்துள்ளன. ஆக்ராவில் தான் அதிகப்பட்சமாக குளிர் நிலவுகிறது. இங்கு 2.5 டிகிரி செல்சியசாக உள்ளது.
தவிர பஞ்சாப், அரியானா, டெல்லி, போன்ற நகரங்களிலும் கடும் குளிர் மக்களை வாட்டி வருகிறது.
Social Plugin