பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 8ம் தேதி தொடங்கி 30ம் தேதி முடிகின்றன.இந்த தேர்வில் பள்ளிகள் மூலம் 7 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். இவர்களுக்காக இந்த ஆண்டு 1870 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 8ம் தேதி தொடங்கி, மார்ச் 30ம் தேதி முடிகின்றன. கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் அனைத்து சலுகைகளும் இந்த தேர்விலும் வழங்கப்படுகிறது.தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழக்கம் போல இந்த ஆண்டு தேர்வுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.ஆங்கில வழியில் தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டும் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 தேர்வு மார்ச் முதல் அல்லது 2ம் தேதிகளில் தொடங்கும். இந்த ஆண்டு பள்ளிகள் தாமதமாக தொடங்கியதால் பிளஸ் 2 தேர்வு ஒரு வாரம் தாமதமாக மார்ச் 8ம் தேதி தொடங்குகிறது. இந்த முறை தயாரிக்கப்பட்டுள்ள தேர்வு அட்டவணையில், முக்கிய பாடங்களுக்கு இடையில் 2 நாட்கள் விடுமுறை வரும்படி தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படும் இயற்பியல், கணக்கு, விலங்கியல், உயிரியல், வேதியியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகளுக்காக இடையிடையே 2 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் மேற்கண்ட பாடங்களில் தேர்வு எழுதும் மாணவர்கள் பதற்றம் இல்லாமல் தேர்வுக்கு படிக்க முடியும். பள்ளிகள் மூலம் 7 லட்சத்து 63 ஆயிரம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். தனித் தேர்வர்களாக சுமார் 40 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். இதற்காக மொத்தம் 1870 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகளை தடுக்க அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1000க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் இடம்பெறுகின்றனர். அவர்களுடன் அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்களும் தேர்வு மையங்களில் சென்று கண்காணிப்பார்கள். ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத் துறை எச்சரித்துள்ளது.
Social Plugin