Hot Posts

6/recent/ticker-posts

புத்தாண்டு:ஆங்கிலேய கலாச்சாரத்தில் சீரழியும் இஸ்லாமிய இளைஞர்கள்!!



  புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர் இன்றைய இஸ்லாமிய இளைஞர்கள்.  ஆங்கிலேயர்கள் கலாச்சாரத்திற்கு இஸ்லாமிய இளைஞர்கள் மாறி வந்துக் கொண்டுள்ளனர். இதற்கு புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு உதாரணம். நமது முன்னோர்கள் கொண்டாடத ஆங்கில வருடப்பிறப்பை, கொண்டாட வேண்டிய கிறுஸ்துவ மக்களைவிட நமது இளைஞர்கள் அன்மைக்காலங்களில் பெரும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். புத்தான்டு கொண்டாட்டம் என்ற பெயரில் மது அருந்திவிட்டு இரவு முழுவதும் ஆட்டம் போடுவது அதிகரித்து வருகின்றது. 
சில இளைஞர்கள் தியேட்டர் போன்றவற்றிலும்,போதை தரும் பல வஸ்துக்களையும் உபயோகித்து  புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.
இது நமது அனைவருக்கும் வேதனையான செய்தியாகும். ஆங்கில வருடப் பிறப்பை கொண்டாட வேண்டிய கிறுஸ்தவர்கள் சர்ச்சில் வழிபாடு செய்து அமைதியான முறையில் புத்தாண்டை வரவேற்று கொண்டாடுகின்றனர். ஆனால் அரபி வருட பிறப்பிற்கே முக்கியத்தும் கொடுக்காத நமது இஸ்லாமியர்கள் ஆங்கில வருட பிறப்பை மதுவுடன் கொண்டாடி சமூகத்திற்கு ஒரு இழுக்கை உருவாக்கி வருகின்றனர். இதில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால் ஒருவன் திருந்த நினைத்தால் அவனை திருந்த விடுவதில்லை.
"பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு செல்லம் கொடுப்பதை தவிர்க்கவும்".
அதற்காக செல்லம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.
செல்லம் கொடுக்கும் நேரத்தில் செல்லம் கொடுக்க வேண்டும்.
ஆகவே வருங்காலத்தில் புத்தாண்டு என்னும் போதையை ஒழிக்க அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.