அதிரையில் வயதானவர்கள் பெரும்பாலும் விளையாட்டுப் போட்டிகளில் கால்பந்தாட்டதையே விரும்பி பார்பார்கள்.அந்த விளையாட்டை மட்டுமே ஊக்கமளிப்பார்கள்.மற்ற விளையாட்டுகளை எல்லாம் ஒதுக்கி தள்ளி விடுவார்கள்.நமதூர் அதிரை விளையாட்டுத் துறையில் இதுவரையிலும் கொடிகட்டி பறக்கிறது.அது கால்பந்தாட்டத்திலும் சரி,கிரிக்கெட் போட்டியிலும் சரி.அதிரையில் உள்ள பெரியவர்கள் கால்பந்தாட்டத்தை ஊக்குவிப்பது போன்று கிரிக்கெட்டை ஊக்குவிப்பதில்லை.
முன்பொரு காலகட்டத்தில் அதிரை கால்பந்தாட்ட அணி களத்தில் இறங்கினால் மற்ற அணிகள் எல்லாம் நடுங்குவார்கள்.அந்த அளவிற்கு கால்பந்தாட்டத்தில் ஊக்கமும்,ஆக்கமும் தான் காரணம்.ஆனால் தற்போது அது சற்று குறைந்துள்ளது.கிரிக்கெட்டில் என்றும் அதிரை அசத்தி தான் வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் (இந்த 2011 ம் ஆண்டையும் சேர்த்து) AFCC கிரிக்கெட் அணி சென்ற இடமெல்லாம் வெற்றி கோப்பையை தட்டி சென்றுள்ளது.
AFCC கிரிக்கெட் அணி மிகவும் திறமை வாய்ந்த அதிரை வீரர்களின் திறமையான ஆட்டத்தால் போகும் இடமெல்லாம் வெற்றி!வெற்றி!வெற்றி!
அந்த அளவிற்கு அணியின் கேப்டனும் சக வீர்ரகளும் திறமை வாய்ந்தவர்களாக இருந்ததினால் வெற்றி பெற முடிந்தது.
தற்போது புதிதாக ASFCC என்ற கிரிக்கெட் அணி இளம் வீரர்களை கொண்ட திறமையான அணியாக வலம் வருகிறது.சொல்ல போனால் வங்கதேசம் கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களை போன்று துடிப்பானவர்கள்.
ASFCC அணி வீரர்கள் சிறு வயதினராக இருந்தாலும் அரங்கில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகின்றனர்.AFCC அணியை போன்றே இந்த கிரிக்கெட் அணியிலும் திறமையான கேப்டனும் ,திறமையான வீரர்களும் அணியை அற்புதமாக வழிநடத்தி வருகின்றனர்.
இப்படி வெற்றி மேல் வெற்றி சூடி வரும் கிரிக்கெட் அணிகளுக்கு ஏன் அதிரையில் ஊக்கமளிப்பதில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது.
எல்லா விளையாட்டும் சுறு,சுறுப்பான விளையாட்டு தான்.எந்த ஒரு விளையாட்டையும் சோர்வாக எடுத்து கொள்வது தவறு.
அதிரைக்கு புதிய சரித்திரத்தை படைத்து வரும் ASFCC கிரிக்கெட் அணிக்கு ஊக்கமளிக்க வேண்டும்,ஆதரவு அளிக்க வேண்டும்.
உலக கல்வி மற்றும் மார்க்க கல்வி போன்று இந்த விளையாட்டுகளையும் ஊக்கபடுத்த வேண்டும்.
விளையாட்டுத் துறையில் மீண்டும் அதிரை ஜொலிக்க வேண்டும்.அதற்க்கு பெற்றோர்களின் ஆதரவும்,பெரியோர்களின் ஆதரவும் மிக,மிக முக்கியம்.
Social Plugin