அதிரைக்கு அகல ரயில் பாதை பணியை விரைவாக துவங்கக் கோரி பேரூராட்சி தலைவர் சகோ.S.H.அஸ்லம் முன்னிலையில் தி.மு.க நாடாளமன்ற உறுப்பினர் K.விஜயன் அவர்களை இன்று நேரில் சந்தித்து அதிரைவாசிகள் கோரிக்கை மனுவை அளித்தனர்.இதில் அதிரை நல்வாழ்வு பேரவை தலைவர்,செயலாளர் போன்ற பல முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர்.
வரும் 9 ஆம் தேதி மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி ஜி.கே.வாசன் அவர்களை சந்திக்க உள்ளதாக அதிரை நல்வாழ்வு பேரவை செயலாளர் தெரிவித்து உள்ளார்.
அதிரைக்கு அகல ரயில் பாதையை பணியை விரைவாக துவங்கி மக்களின் ஏக்கத்தை தணிக்க வேண்டும்.இந்த கோரிக்கை மனுவின் மூலம் அதிரைக்கு அகல ரயில் பாதை பணியை விரைவாக துவங்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த அதிரை மக்களின் எதிர்பார்ப்பு.
Social Plugin