சென்னையில் இருந்து பொங்கல் கொண்டாட ஊருக்கு செல்வதற்கு வசதியாக இந்தாண்டு வெறும் 3 சிறப்பு ரயில்களை மட்டுமே தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இருப்பவர்கள் ஒவ்வொரு பண்டிகைக்கும் சொந்த ஊருக்கு செல்ல ரயிலையே அதிகம் நம்பியுள்ளனர். இதற்கு பாதுகாப்பான பயணம் என்பதோடு கட்டணம் குறைவு, வசதி என பல காரணங்கள் உள்ளன. இந்நிலையில், பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக 3 மாதத்திற்கு முன்பே சென்னையில் இருந்து கோவை, தஞ்சாவூர், சேலம், ஈரோடு, திருச்சி, நாகர்கோவில், தூத்துக்குடி செல்லும் ரயில்களின் முன்பதிவு முடிந்து விட்டது. பொங்கலுக்காக சிறப்பு ரயில்களை அறிவிப்பார்கள் என்று பல்வேறு தரப்பினர் காத்திருந்தனர். ஆனால் தெற்கு ரயில்வே நாகர்கோவிலுக்கு 2 , கோவைக்கு ஒன்று என வெறும் 3 சிறப்பு ரயில்களை மட்டுமே நேற்று அறிவித்தது.
சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி.13ம் தேதி இரவு 10.30 மணிக்கு சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் சிறப்புரயில்(06021) நாகர்கோவிலுக்கு புறப்படும். மறுமார்க்கமாக ஜனவரி.17ம் தேதி பகல் 12.40 மணிக்கு சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் சிறப்புரயில்(06022) சென்னைக்கு புறப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி.14ம் தேதி இரவு 8 மணிக்கு சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் சிறப்புரயில்(06023) நாகர்கோவிலுக்கு புறப்படும். மறுமார்க்கமாக ஜனவரி.16ம் தேதி இரவு 7.40 மணிக்கு சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் சிறப்புரயில்(06024) சென்னைக்கு புறப்படும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி.18ம் தேதி இரவு 10.30 மணிக்கு சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் சிறப்புரயில்(06025) கோவைக்கு புறப்படும். கோவையில் இருந்து ஜனவரி.17ம் தேதி இரவு 11.45 மணிக்கு சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் சிறப்புரயில்(06026) சென்னைக்கு புறப்படும். இந்த ரயில்கள்அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மார்க்கத்தில் இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஜனவரி.7ம் தேதி தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இப்படி வெறும் 3 சிறப்பு ரயில்களை மட்டுமே பொங்கலுக்கு அறிவித்திருப்பது எல்லோருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறிவிக்கப்பட்ட மூன்று சிறப்பு ரயிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வகையில் சூப்பர் பாஸ்ட் ரயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ஏற்கனவே குளிர்கால சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளோம். ஜனவரி மாதம் இறுதிவரை இயங்கும் அந்த ரயில்கள் பொங்கல் காலத்திலும் இயங்குகின்றன. அதனால்தான் பொங்கலுக்கு குறைந்த எண்ணிக்கையில் சிறப்பு ரயில்கள் இயக்குகிறோம் என்றனர்.

Social Plugin