அதிராம்பட்டினம் கவிக்குயில் தாஹா ஹாஜியார் மரணம்
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் இரங்கள்
அதிராம்பட்டினம் ஜூன் 27
அதிராம்பட்டினம் கவிஞர் மு,முஹம்மது தாஹா அவர்கள் வயது மூப்பின் காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டு அவர்களது வீட்டிலேயே சிகிச்சை பெற்று
வந்தனர் இன்று காலை 8 மணியளவில் அதிராம்பட்டினம் நெசவு தெரு இல்லத்தில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்கள் ஜனாசா நல்லட்க்கம் இன்று மாலை 5 மணியளவில் மரைக்காயர் பள்ளியில் நடைபெறும்
கவிஞர் தாஹா அவர்கள் தனது இனிமையான கணீரென்ற குரலில் அழகாகப் பாடுவார் மாணவர் பருவத்தில் தாஹா. துவக்கப் பள்ளியில் படிக்கும் காலம் தொட்டே இறை வணக்கக் கூட்டங்களில், சூரா பாத்திஹா, இறை வணக்கப் பாட்டு, நாட்டுப் பண் இவற்றை மொழிவார். இது உயர் நிலைப் பள்ளியிலும் தொடர்ந்தது. உயர் நிலைப் பள்ளியில் பேச்சுப் போட்டியிலும் கலந்துகொள்வார். படிக்கும் காலங்களிலேயே கவி படைக்கும் ஆற்றல் அவரைக் கவ்விக் கொண்டிருந்தது. தான் எழுதிய கவிதைகளை இசையோடு பாடுவார் கவிக்குயில் தாஹா. இவர்களின் மரனச் செய்தி கேள்விபட்டு வேதனை அடைந்தேன் என்று தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் மதுக்கூர் அப்துல்காதர் ஹாஜியார் கூறினார்
மரண மடைந்த கவிக்குயில் மு, முஹம்மது தாஹ அவர்களது கப்ர் வாழ்க்கை பிரகாசமாக்கி அவர்களது குடும்பத்தாருக்கு பொறுமையை கொடுக்க துவாச்செய்கின்ரேன் என்று கூறினார்
எழுத்தாளர் தாஹா அவர்கள்
இதுவரை 49 கவிதை நூல்கள் எழுதியிருக்கிறார். இதற்காக இவர் பட்டங்களும் விருதுகளும் நிறைய வாங்கியிருக்கிறார். சிறுவர் பட்டத்துக்காக நூல் வாங்குவர்; இந்தப் பெரியவர் நூல்களுக்காகப் பட்டங்கள் வாங்கியிருக்கிறார்!
இவரது கவி ஆற்றலைக் கண்ட பேராசியர் இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர் அவர்கள், இவருக்கு ‘அருட் கவி’ என்று பட்டம் வழங்கினார்கள். அன்று முதல் முகம்மது தாஹா, ‘அதிரை அருட்கவி’ என்று வழங்கப்படுகிறார். தஞ்சைப் பல்கலைக் கழகம் ‘புதுமைக்கவிஞர்’ என்ற பட்டம் வழங்கியுள்ளது. கவிஞர் தா. காசிம் பெயரில் ‘செம்மொழி இலக்கியச் சீரவை’ இவருக்கு விருது வழங்கியுள்ளது.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், அதைப் பற்றி சிறந்த நூல் எழுதியதற்காக ரூ. 25,000/= பொற்கிழி வழங்கியுள்ளது. ஜவ்வாது புலவர் நினைவாக (ஈரோடு) நபி புகழ் காப்பியம் எழுதியமைக்காக ரூ.5,000/= பொற்கிழி அதிரை அருட்கவி வழங்கப்பட்டார். பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம், 20-21 நூற்றாண்டு நாயகக் காவியங்கள் படைத்ததற்காகப் புகழ் பெற்ற எட்டு கவிஞர்களுக்கு பரிசும், பாராட்டும், விருதுகளும் வழங்கப்பட்டன. அவர்களுள் இலக்கியச் செம்மல் தாஹாவும் ஒருவர். ராமநாதபுரம் தமிழ்ச் சங்கம் டாக்டர் கமால் தலைமையில் கவிஞர் தாஹாவின் நூல் ஒன்றினை வெளியிட்டுச் சிறப்புச் செய்தது. இவை தவிர ‘கவிஞானி’, ‘ஆன்மீகக் கவிஞர்’, ’தமிழ்மாமணி’, ‘தீனிசைத் தமிழ்த் தேனருவி’, ‘கவிதைச் செம்மல்’ என்ற பட்டங்களும் வாங்கியுள்ளார். விருதுகள் இவரின் விழுதுகள்! அதனால் கவிப் பூங்காவில் அவர் வேரூன்றி நிற்கிறார்
Social Plugin