Hot Posts

6/recent/ticker-posts

இந்தியயூனியன் முஸ்லிம்லீக் மாநில துணைத் தலைவர். இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நாவாஸ்கனி சாதனை. முஸ்லிம்லீக் செயலாளர் வழக்கறிஞர் முஹம்மது தம்பி புகழாரம்.

அதிராம்பட்டினம் நகர முஸ்லிம்லீக் செயலாளர் வழக்கறிஞர் முஹம்மது தம்பி.

பதவி ஏற்றவுடன் முதல் அறிவிப்பாக தன்னுடைய சொந்த நிதியிலிருந்து 200 மாணவர்களுக்கான உயர்கல்வி உதவியை வழங்கினார்.

அடுத்த ஆண்டு 600க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் அதற்கு அடுத்த ஆண்டு 700-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் கடந்த ஆண்டு 700 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும்., தன்னுடைய சொந்த நிதியில் இருந்து உயர்கல்வி உதவியை வழங்கி சாதனை செய்துள்ளார்.

இதுவரை கிட்டத்தட்ட 3500 மாணவர்கள் நவாஸ்கனி எம் பி யின் உயர்கல்வி உதவியை பெற்று கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது

2023 ம் ஆண்டும் 700க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான உயர்கல்வி உதவி வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது

 இராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளையும் நேரில் சந்தித்து, அப்போதைய மாநில அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளையும் சந்தித்து உரிய முயற்சிகளை மேற்கொண்டு நாடாளுமன்றத்திலும் இதுகுறித்து வலியுறுத்தி பேசினார்.

அதற்கு பின்பு அறிவிக்கப்பட்ட தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரிகளுக்கான அறிவிப்பில் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியும் இடம்பெற்றது.

தற்போது ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

ஆண்டுதோறும் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் சிறந்த பள்ளிகளை ஊக்குவிக்கும் வண்ணம் தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு கல்வி ரத்னா எனும் சிறப்பு விருந்தினை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரின் சார்பாக வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.

ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று நெடு நாட்களாக கோரிக்கை இருந்து வரும் நிலையில் பதவியேற்றதிலிருந்து அதற்கான முயற்சிகளை பெரிதும் மேற்கொண்டுள்ளார்.

ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் விமான போக்குவரத்து துறை மானிய கோரிக்கையின் போது முன்வைத்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை தொடர்ந்து சந்தித்து அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொண்டார்.

தொடர் முயற்சியின் விளைவாக இராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான நடவடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபட்டு சென்னையிலிருந்து ராமநாதபுரத்திற்கு விமான சேவை ஏற்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

மீண்டும் விமான போக்குவரத்து துறை அமைச்சரை நேரில் சந்தித்து விரைவாக சென்னையிலிருந்து ராமநாதபுரத்திற்கு விமான சேவை தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு சான்று வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக ராமநாதபுரம் மிளகாய் விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதனை நாடாளுமன்றத்தில் கேள்வியாக முன்வைத்து வலியுறுத்தி பேசினார்.
ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்படுவதற்கான அவசியத்தையும் தேவையும் விவரித்து நாடாளுமன்றத்தில் பேசியதோடு மட்டுமல்லாமல் துறை சார்ந்த அமைச்சரையும் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

 இதன் விளைவாக ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதனை வெகுவாக பாராட்டினர்.

 மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண தனி கவனம் கொண்டு அக்கறையோடு செயல்பட்டவர்.

நாடாளுமன்றத்தில் அதிக முறை மீனவர்களின் பிரச்சனை குறித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்.

இலங்கை சென்றிருந்தபோது இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அவர்களை நேரில் சந்தித்து தமிழக இலங்கை மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சிகளை மேற்கொண்டார்.

இலங்கை சட்டத்துறை அமைச்சர் மற்றும் இலங்கை மீன்வளத்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து இலங்கையில் சிறைப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களின் விடுதலைக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

மீனவ மக்களை பழங்குடியின பட்டியல் சமூகத்தில் இணைத்து கல்வி பொருளாதார வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

தமிழக இலங்கை மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண ஒன்றிய அரசை பலமுறை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி பேசினார்.

பொறுப்பேற்ற சிறிது நாட்களிலேயே கொரோனா காலகட்டம் துவங்கியது.

அப்போது நாடாளுமன்றத்தில் இருந்து நேரடியாக ராமநாதபுரம் தொகுதிக்கு வந்து இங்கேயே முகாம் அமைத்து, தினமும் மக்கள் பணிகளில் துரிதமாக செயல்பட்டார்.

ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தொகுதியில் உள்ள அனைத்து அம்மா உணவுகளிலும் ஏழை எளிய மக்களின் செலவை முழுமையாக தானே ஏற்றுக் கொண்டார்.

எதற்கு பின்பு தான் அரசு அம்மா உணவகங்களில் இலவச உணவு என்ற அறிவிப்பை வெளியிட்டது.

கொரோனா காலகட்டத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த மீனவர்களை மீட்டுக் கொண்டு வரும் பணியில் துரிதமாக செயல்பட்டு அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து, அவர்களை மீட்டு வந்ததோடு மட்டுமல்லாமல் தன்னுடைய சொந்த செலவில் அவர்களுக்கான தனிமைப்படுத்தும் வசதி மருத்துவ உதவி உள்ளிட்ட உதவிகளை செய்ததோடு அவர்களுக்கான உணவு உடை உள்ளிட்ட ஏற்பாட்டையும் தன்னுடைய சொந்த செலவிலேயே செய்தார்.

தானே முன் நின்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உணவு சமைக்கும் இடத்திலும் நின்று பணி செய்த புகைப்படம் இணையதளத்தில் பரவி பெரும் பாராட்டை பெற்றது.

 முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலகட்டத்தில் கேன்சர் டயாபடிக்ஸ் உள்ளிட்ட அவசர சிகிச்சை தேவை உடைய நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு செல்வதற்கும் வெளி மாவட்ட மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கும் நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்ட பொழுது அதற்கான பிரத்தியேகமாக 24 மணி நேர சேவை மையத்தை ஏற்படுத்தி எம் பி அலுவலக உதவியாளர்கள் மூலம் அவர்களுக்கான அனுமதி சீட்டுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

கொரோனா காலகட்டத்தில் வெளிநாட்டில் சிக்கித் தவித்த தமிழக மக்களை மீட்கும் வண்ணம் தனி குழு அமைத்து அதற்காக எம்பி அலுவலக உதவியாளர்களை பொறுப்பாளர்களாக நியமித்து, அலுவலகம் மற்றும் உதவி மையம் ஏற்படுத்தி பெரும் பங்காற்றினார்.

விமானங்கள் இல்லாத சூழ்நிலையில் சார்ட்டட் விமானங்களை ஏற்பாடு செய்து வெளிநாட்டில் வாழக்கூடிய தமிழ் மக்களை அழைத்து வருவதில் பெரும் பங்காற்றி, உங்களை தாயகம் அழைத்து வந்ததோடு மட்டுமல்லாமல் இங்கு வந்து அவர்களை தனிமைப்படுத்துவது அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது என அனைத்து ஏற்பாடுகளையும் தன்னுடைய சொந்த செலவில் செய்து நூற்றுக்கணக்கான வெளிநாடு வாழ் தமிழர்களை மீட்டுக் கொண்டு வந்தார்.

கொரோனா காலகட்டத்தில் இவர் ஆற்றிய சேவையை பாராட்டி லண்டனைச் சார்ந்த சர்வதேச WHD அமைப்பு சிறந்த மக்கள் தூதுவருக்கான சர்வதேச விருதினை வழங்கி கௌரவித்தது.

இராமநாதபுரம் மாவட்டம் அதிக அளவில் வெளிநாட்டு வாழ் தமிழர்களை உள்ளடக்கிய மாவட்டம்.

வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழக மக்கள் எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் பொழுது அவர்களின் உடலை தாயகம் கொண்டுவர பல்வேறு சிரமங்களை சந்திப்பதாக மக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து, தூதரகத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு விரைவாக பிரேதங்களை கொண்டு வருவதற்கான பிரத்தியேக ஏற்பாட்டினை மேற்கொண்டு எம்பி அலுவலக உதவியாளர்கள் மூலம் அந்த சேவை தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் உயிரிழந்த தமிழர்களின் பிரேதங்களில் சென்னை விமான நிலையத்தில் கிளியரன்ஸ் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாகவும் காலதாமதம் ஏற்படுவதாகவும் கோரிக்கை முன் வைத்ததை அடுத்து சென்னை விமான நிலையத்தில் செய்வதற்கு என்று தனி உதவி மையத்தை ஏற்பாடு செய்து அதற்கான எம்பி அலுவலக உதவியாளர்களை நியமித்து வெளிநாடுகளில் உயிரிழந்த தமிழக மக்களின் பிரேதங்கள் சென்னை விமான நிலையத்தில் விரைவாகவும் எளிதாகவும் கிளியரன்ஸ் செய்யப்பட்டு உறவினர்களிடம் தொடர்ந்து ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

இந்த சேவையை பல்வேறு சர்வதேச அமைப்புகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டபம் கேம்ப் மற்றும் வாலாந்தரவை ரயில் நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது அதனை முறியடித்து ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் தெற்கு ரயில்வே பொது மேலாளர் தெற்கு ரயில்வே அதிகாரிகளை நேரில் சந்தித்து அந்த பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு அந்த இரு ரயில் நிலையங்களையும் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் பயணிகள் ரயில் அங்கு நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.

எம் பி அவர்களின் தொடர்பு முயற்சியின் விளைவாக மண்டபம் கேம்ப் மற்றும் வாலாந்தரவை ரயில் நிலையம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு பயணிகள் ரயில் அங்கு நின்று செல்கிறது.

இந்தியா முழுவதிலுமிருந்து இராமேஸ்வரம் வந்து செல்ல புதிய இணைப்பு ரயில்களை
இயக்க மத்திய ரயில்வேத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியதன் விளைவாக மத்திய அரசு புதிய ரயில்களை இயக்கி வருகிறது.

சென்னை ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ் மண்டபம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் நெடு நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர் அதனையும் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு பலமுறை வலியுறுத்தி கொண்டு சென்று தற்போது மண்டபம் ரயில் நிலையத்தில் அந்த ரயில் நின்று செல்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ராமேஸ்வரம் பனாரஸ் வாராந்திர ரயில் மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது, இதனை ராமநாதபுரத்தில் நின்று சென்றால் ராமநாதபுரம் பகுதி மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்ற கோரிக்கை இழந்த போது அதனை தெற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தெற்கு ரயில்வே பொது மேலாளரை தொடர்ந்து மூன்று முறை சந்தித்து வலியுறுத்தியதில் விளைவாக தற்போது ராமேஸ்வரம் பனாரஸ் எக்ஸ்பிரஸ் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது.

மதுரை- பரமக்குடி ராமநாதபுரம் சூழ 49 ல் உள்ள கமுதக்குடி கிராம மக்களுக்கு இடையூறாக டுஊ 468 லெவல் கிராசிங் (ரயில்வே கேட்) முன்னறிவிப்பின்றி முடியதை டெல்லி சென்று மத்திய ரயில்வே அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதற்கு கமுதக்குடி மக்கள் எம்.பி. அலுவலகத்திற்கு திரண்டு வந்து நன்றி தெரிவித்தனர்

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலை வசதி செய்து தரப்பட வேண்டும் என்று பொதுமக்களின் நெடுநாள் கோரிக்கைக்கிணங்க தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம், திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 12 சாலைகள் சுமார் 34.05 கிலோமீட்டர் தொலைவிற்கு சுமார் 18 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை எம்பி அவர்களின் பரிந்துரையில் அமைக்கப்பட்டிருக்கிறத
இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 2020-21 ஆம் ஆண்டில் சுமார் 172.434 கிலோமீட்டர் அளவிலான சாலை சுமார் 112 கோடி மதிப்பீட்டில் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2021-22 ஆம் ஆண்டில் சுமார் 20 கிலோ மீட்டர் சாலை 13 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டது.

2022- 23 ஆம் ஆண்டில் சுமார் 89 கிலோமீட்டர் தொலைவிலான சாலை சுமார் 64 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் போடுவதற்காக எம்பி அவர்களின் பரிந்துரையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2022-23 ஆம் ஆண்டில் எட்டு கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைகள் அமைப்பதற்கான பரிந்துரை எம்பி அவர்கள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இராமநாதபுரம் மாவட்டம் மக்களுக்கு பாஸ்போர்ட் சேவா மையத்தை திறந்து வைத்த தோடு பாஸ்போர்ட் சேவை மையம் துரிதமாக செயல்பட வேண்டுகோள் விடுத்தார்.

இராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் மற்றும் ஏர்வாடி அரசு மருத்துவமனைகளை நேரில் ஆய்வு செய்து தமிழக அரசு சுகாதாரத்துறை செயலளரை நேரில் சந்தித்து மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்கள், லேப் டெக்னீஷியன்கள் நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

மரைக்காயர் பட்டனம் மக்கள் பல ஆண்டுகாலம் மின்பற்றாக்குறை மற்றும் குறைந்த மின்னழுத்தத்தால் அவதிபெற்ற நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி அவர் களின் முயற்சியினால் புதிய டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தப்பட்டு மக்கள் பயனடைந்து வரு கின்றனர். வழுதூர் கிராம மக்களும் மின்பற்றாக்குறை மற்றும் குறைந்த மின்னழுத்தத்தால் அவதிபெற்ற வந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி அவர் களின் முயற்சியினால் புதிய டிரான்ஸ்பார்மர்கள் பொருத்த ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வரு கிறது.

இராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் உயிர்யிழந்த போது நேரில் சென்று குடும்பத்தார் களை சந்தித்து ஆறுதல் கூறி ஒவ்வொரு குடும்பத்தார்களுக்கும் தலா ரூ50 ஆயிரம் நிதி யுதவி வழங்கினார்.

தமிழக மீனவர்கள் நலன் குறித்து ஜுலை மாதம் 1 ஆம் தேதி மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்க மத்திய அரசு ரூ300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக பதில் தெரிவித்துள்ளார்.

 விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டுத்தொகை கிடைக்க மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து காப்பீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளையும் சந்தித்து உடனடியாக பயிர் காப்பீட்டு தொகையை விடுவிக்க வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்திலும் இதுகுறித்து வலியுறுத்தி பேசினார்.

இதன் விளைவாக விவசாயிகளுக்கு 2020-21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகை விடுவிக்கப்பட்டது.
: தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க காரணமாக இருந்தார்

 அன்மையில் இலங்கை சென்று பிரதமரை நேரில் சந்தித்து இலங்கை கடற்படை யினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க கோரிக்கை வைத்ததோடு இந்தியாவிற்கு கொண்டு வர இயலாத வகையில் பழுதடைந்த படகுகளை ஏலமிட்டு வரும் தொகையோடு மத்திய அரசும் இழப்பீட்டுத்தொகை வழங்க கோரிக்கை வைத்து வலியுறுத்தி வருகிறார்.

தமிழக மீனவர்களையும், 100 படகுகளையும், உடமைகளோடு விடுவிக்க கோரிக்கை வைத்ததோடு மீனவர்களுக்கு சட்டஉதவிகள் வழங்கவும் வலியிறுத்தினார்

பனைத்தெழில் அதிகமாக நடைபெறும் சாயல்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறார்

டெல்லி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தமிழ் பேராசிரியர் பதவிகளை நிரப்ப மக்களவையில் வலியுறுத்தி பேசினார்

 அதிகான வழக்குகள் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டியதோடு நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வழக்குகளை விரைந்து முடிக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி பேசினார்.

அதிரை நகர IUML
செயலாளர் வழக்கறிஞர் முஹம்மது தம்பி