Hot Posts

6/recent/ticker-posts

உங்களுக்கு தெரியுமா? பப்பாளி பழத்தின் மகிமை..



 இதோட தாவரவியல் பேரு காரிசிகா பாபாயா. கனிகள், விதைகள், இலைகள் என்று அனைத்தும் மருத்துவக்குணம் வாய்ந்தவைதான். பப்பாளி வயிற்றுக்கோளாறுக்கு மருந்தாகப் பயன் படுகிறது. செரிமானத்தை ஊக்குவிக்கிறது. பப்பாளிக்காயின் பால், வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது.
தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்குகிறது. இதோட விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது. இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்து. இதய நோயைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.
காய்களில் இருந்து பப்பைன் என்ற புரதங்களை சிதைக்கும் நொதி, கைமோபப்பைன், மாலிக் அமிலம், பெக்டின் களிகள், புரதம், சர்க்கரை, க்ரிப்டோசாந்தின், வயலா சாந்தின், கரோட்டின், அஸ்கார்பிக் அமிலம், தையமின், ரைபோபிளேவின், கார்ளப்பசமைன் போன்ற ரசாயனப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகிறது.