Hot Posts

6/recent/ticker-posts

எவ்வளவு சொன்னாலும் கேட்பது இல்லை போலும்!!!!

நாமும் எத்தனை தடவை தான் சொல்வது.நாம் என்றால்  நாம் மட்டும் இல்லை அதிரை செய்தி போன்ற பல இணையதளங்களும் இந்த செய்தியை   வன்மையாக கண்டித்து செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.இவை எல்லாம்  எதற்க்காக மாணவர்களின்  நலனுக்காக!

ஆம் சகோதரர்களே , படிக்கும்    நேரங்களில் அதாவது இரவு  நேரத்தில் மின் தடை செய்யப்படுகிறது. இப்படி தினமும்  மின் தடை செய்தால் மாணவர்கள் எப்படி படிப்பார்கள்?
எப்படி தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள்? 
சொல்ல போனால்  இன்னும் எத்தனை ,எத்தனையோ குடும்பங்கள் பசிப் பட்டினியையும் பொருட்படுத்தாமல் தனது பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைகின்றார்கள்.அந்த  மாணவர்களை  நம்பி தான் இன்று பல குடும்பங்கள் இருக்கிறது. 

வசதி படைத்தவர்கள் தங்களது  வீட்டில்  மின் சேமிப்பு பெட்டி (BATTERY) மூலமாக மின்சாரத்தை சேமித்து  வைக்கின்றனர்.இதனால் மின் தடை செய்ததற்கு எந்தப் பயனும் இல்லை.

தேர்விற்கு இன்னும் ஒரு மாதங்களே     இருக்கும் நிலையில் இப்படி மின் தடை செய்தால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகமாட்டார்களா?
சற்று நிதானத்துடன் சிந்தியுங்கள் எனதருமை சகோதரர்களே!!!