தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள வங்காரம்பேட்டை செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் முத்து. அவரது மகள் வித்யா. (வயது 11). அங்கு உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று படிக்கும் போது மின் தடை ஏற்பட்டதால் வீட்டில் சிம்னி விளக்கு ஏற்றி வைத்து படித்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சிம்னி விளக்கு தவறி விழுந்தது. இதில் வித்யா மீது விளக்கு சரிந்தது. உடல் கருகிய அவர் வேதனையால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். உடல் கருகிய வித்யாவை தூக்கி கொண்டு தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி வித்யா இறந்தார். இது குறித்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் மின் தடையால் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
மாணவர்கள் படிக்கும் நேரங்களில் மின் தடை செய்தால் என்ன செய்வது?
Social Plugin