Hot Posts

6/recent/ticker-posts

பற்களை முறையாக பராமரிப்போம்!!


பற்களைச் சரியாகப் பராமரிக்காமல் இருந்தால், அவை மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கும். சிகரெட் ‎போதை பாக்குகளைப் பயன்படுத்துபவர்கள், வெற்றிலை போடுபவர்கள் போன்றவர்களின் பற்களைப் ‎பார்த்தால் கறைபடிந்து காணப்படும். வாய் துர்நாற்றம் வேறு. பற்களை முறைப்படி துலக்காதது, ஒரே ‎பிரஷ்சை வருடக் கணக்கில் பயன்படுத்துவது, கண்ட ‎கண்ட பேஸ்ட்டை உபயோகிப்பது போன்றவையே ‎இதற்குக் காரணமாகும்.

காலையிலும், இரவும் என ஒருநாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும். பிரஷ் முழுதும் பேஸ்ட் ‎வைக்க வேண்டியதில்லை. பாதி அளவு போதுமானது. தொடர்ந்து ஒரே பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள். ‎மென்மையான பிரஷ்ஷையே பயன்படுத்த வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ்ஷை ‎மாற்றுவது நல்லது. ‎

பற்பொடியை விட பேஸ்ட் கொண்டு பல் துலக்குவதே சிறந்தது. ப்ளோரைடு கலந்த பேஸ்ட்கள் ‎‎குழந்தைகளின் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும். பற்களுக்கு இடையே சிறிது இடைவெளி விட்டு ‎துலக்கும்போது உணவுத் துகள்கள், படலங்கள் வாய் கொப்பளிக்கும் போது வெளியேறி விடும். ‎சிலருடைய பற்களுக்கு இடையே இடைவெளி காணப்படும். இவர்கள் இன்டர்டென்டல் பிரஷ் கொண்டு ‎அகற்றலாம். ‎சாக்லேட், ஐஸ்கிரீம், குளிர் பானங்கள் போன்றவற்றைக் அதிகமாக சாப்பிட்டால் பற்சொத்தை ஏற்படும். ‎சாப்பிட்ட பின்பு நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும். மவுத் வாஷை மருத்துவரின் ஆலோசனைப்படி ‎மட்டுமே பயன்படுத்த வேண்டும். ‎

தினமும் பற்களையும், ஈறுகளையும் சுத்தம் செய்து வந்தால் இருதய நோய்கள் வராமல் தடுக்கலாம் ‎என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். பற்களின் சுத்தத்திற்கும் இருதய நோய்க்கும் தொடர்பு ‎உண்டு. பற்களையும் ஈறுகளையும் சுத்தமாக வைத்திருந்தால் இருதயக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை ‎தடுக்க முடியும் என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது. மனிதனின் வாய்ப்பகுதியில் ஏராளமான பேக்டீரியாக்கள் எனப்படும் நுண்ணுயிர்கள் உள்ளன. இதில் ‎நன்மை தரும் நுண்ணுயிர்களும் உண்டு, தீமை தரும் நுண்ணுயிரிகளும் இருக்கின்றன. 

இவற்றில் தீமை தரும் நுண்ணுயிரிகள் வாய்ப்பகுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி ‎இருதயத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வுகளில் தெரியவந்தது. இவ்வாறு பாதிப்பை ‎ஏற்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறது பார்பிரோமோனஸ் ஜிங்வலிஸ் (Porphyromonas Gingivalis) ‎நுண்ணுயிரி ஆகும். தினமும் சுத்தமாக பல்துலக்குவதன் மூலமும், ஈறுகளை ஆரோக்கியமாக ‎வைத்திருப்பதன் மூலமும் இந்த நுண்ணுயிரி அழிக்கப்பட்டு விடுகிறது. 

இது வாய்ப்பகுதியில் அதிகமாக இருந்தால்,அது ரத்தத்தில் கலந்து இருதயத்துக்கு ரத்தம் எடுத்துச் ‎செல்லும் குழாயில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதாவது ரத்தக்குழாயில் கொழுப்பு சேர்ந்து அடைப்பு ‎ஏற்படுத்துவதை இந்த நுண்ணுயிரி தடுக்கவில்லை. பல்வேறு வயது பிரிவு மற்றும் ‎ஆரோக்கியமானவர்கள், இருதய நோய் உள்ளவர்கள் போன்றவர்களைக் கொண்டு இந்த ஆய்வு ‎நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ‎நடைபெறும் ஆய்வுகளின் மூலம் பல புதிய தகவல்கள் வெளிவரலாம். 
பல் வலி,பல் வீக்கம் போன்ற பற்கள் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு "நர்ஸ் பற்பொடி" உபயோகிங்கள்.உடனடித் தீர்வு!!
நர்ஸ் பற்பொடி தொடர்புக்கு :9894500545