கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டங்களுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன்,
கூடங்குளம் அணுஉலையை செயல்படுத்த வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பம். தமிழகத்தை இருளில் தள்ள நினைப்பவர்களின் போராட்டடத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டங்களுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழர்களின் நலனை காக்கும் வகையிலேயே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மீனவர் பிரச்சனை உள்பட எந்த பிரச்சனையாக இருந்தாலும், தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது என்றார்.
Social Plugin