சங்கரன்கோவில் இடைத்தேர்தல் மார்ச் 18ம் தேதி நடக்கிறது. இதில் அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட 7 அரசியல் கட்சிகளும், 6 சுயேட்சைகளும் மொத்தம் 13 பேர் களத்தில் உள்ளனர்.
சங்கரன்கோவில் தொகுதியில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 87 வாக்காளர்கள் உள்ளனர். அதிமுக சார்பில் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலும், திமுக சார்பில் மத்திய அமைச்சர் அழகிரி தலைமையிலும், மதிமுக சார்பில் பொதுச் செயலாளர் வைகோ தலைமையிலும், தேமுதிக சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் சுதீஷ் தலைமையிலும் தொகுதி முழுவதும் பிரச்சாரம் நடைபெற்று தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் 5,6 தேதிகளில் திமுக சார்பில் பொதுச் செயலாளர் அன்பழகன் பிரச்சாரம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து திமுக பொருளாளர் ஸ்டாலின் 12, 13, 14 ஆகிய தேதிகளில் வாக்கு சேகரிக்கிறார். மார்ச்15ம்தேதி தலைவர் கருணாநிதி சங்கரன்கோவிலில் நடை பெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் தலைவர் ஞானதேசிகன் 8ம் தேதியும், மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், சிதம்பரம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாருக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.முதல்வர் ஜெயலலிதா 13ம் தேதி சங்கரன்கோவில் தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்கிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் 11ம் தேதி முதல் தொகுதியில் முகாமிட்டு 16ம் தேதி வரை வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து அதிமுகவுக்கு சவால் விடும் வகையில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் அதே நாட் களில் தனியாக பிரச்சாரம் செய்கிறார். 16ம் தேதி தேமுதிக பொதுக்கூட்டமும் நடக்கிறது.
மார்ச் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரை அரசியல் கட்சித் தலைவர்கள் சங்கரன்கோவிலில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ள தால் இடைத்தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. | | | | | |
|
|
|
|
|
|
|
|
Social Plugin