Hot Posts

6/recent/ticker-posts

இன்று இறுதிப் போட்டி:இந்த வருட சாம்பியன் யார்?!!

அதிரை பிரெண்ட்ஸ் கால்பந்து கழகம் கடந்த 2 வார காலமாக கால்பந்து தொடரினை நடத்தி வருகிறது.இந்த தொடரில் சுமார் 15 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.

இந்த தொடரில் நேற்று முன்தினம் நடை பெற்ற அதிரை (AFFA) அணியும் சென்னை அணியும் மோதின.இந்த போட்டி சரி சமனில் முடிவடைந்ததால் நேற்று தொடர்ந்தது.நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி 2 கோல் அடித்தது.பின்பு அதிரை (AFFA) அணி 1 மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.
சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.

ஏற்கனவே நேதாஜி FC தஞ்சாவூர் அணி VVFC மனச்சை அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை நடக்கும் இறுதிப் போட்டியில் (நடப்பு சாம்பியன்) நேதாஜி FC தஞ்சாவூர் அணியோடு சென்னை அணி மோத உள்ளது.
இரு அணியிலும் சம பலம் மிக்க வீரர்கள் இருப்பதால் இன்றைய போட்டியும் ரசிகப் பெருமக்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.