Hot Posts

6/recent/ticker-posts

குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்த முதல் பெங்காலி பிரணாப் முகர்ஜி!


இந்தியக் குடிரயரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் மேற்கு வங்க மாநிலத்தவர் என்ற பெருமையை பிரணாப் முகர்ஜி பெற்றுள்ளார்.
குடியரசுத் தலைவர் பதவியில் இதுவரை 12 பேர் இருந்துள்ளனர்.நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமை பாபு ராஜேந்திர பிரசாத்துக்கு உள்ளது. இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
2வது குடியரசுத் தலைவராக இருந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். தெலுங்கு பிராமண வகுப்பைச் சேர்ந்த இவர் தமிழகத்தில் பிறந்தவர்.
3வது குடியரசுத் தலைவரான ஜாகீர் உசேன் ஆந்திராவில் பிறந்தவர்
4வது குடியரசுத் தலைவரான வி.வி.கிரி ஒரிசாவைச் சேர்ந்தவர். ஆனால் அவர் பிறந்தது அப்போதைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில்.
5வது குடியரசுத் தலைவரான பக்ருதீன் அலி அகமது அஸ்ஸாமைச் சேர்ந்தவர்.
6வது குடியரசுத் தலைவராக ஆந்திராவைச் சேர்ந்த நீலம் சஞ்சீவ ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
7வது குடியரசுத் தலைவரான பெருமை ஜெயில் சிங்குக்கு உண்டு. இவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்த முதல் சீக்கியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
8வது குடியரசுத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.வெங்கட்ராமன் பதவியேற்றார்.
9வது குடியரசுத் தலைவராக உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் தயாள் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
10வது குடியரசுத் தலைவராக கேரளாவைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணன் தேர்வானார்.11வது குடியரசுத் தலைவராக தமிழகத்தின் அப்துல் கலாம் தேர்வு செய்யப்பட்டார். இப்பதவிக்கு வந்த முதல் விஞ்ஞானி, அரசியல் கலப்பற்ற ஒரே தலைவர் என்ற பெருமை இவருக்கு மட்டுமே உண்டு.
12வது குடியரசுத் தலைவராக மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரதீபா பாட்டீல் தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது 13வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி தேர்வாகியுள்ளார். மேற்கு வங்கத்திலிருந்து வந்துள்ள முதல் குடியரசுத் தலைவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலிருந்தே அதிகம் பேர்
குடியரசுத் தலைவர் பதவிக்கு இதுவரை தமிழகத்திலிருந்துதான் அதிகம் பேர் தேர்வாகியுள்ளனர். ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமன், அப்துல் கலாம் என மூன்று பேர் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.