கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நமதூர் பொது மக்கள் ஒன்று கூடி அடிக்கடி ஏற்படும் மின் தடையை வருகின்ற ரமலான் மாதத்திற்குள் சீர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.அதற்க்கு மின்சார வாரிய அதிகாரிகள் மழுப்பலாக பதிலளித்தமையால் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். நாங்கள் ரமளானில் மின்தடை செய்யமாட்டோம் ,இந்த போராட்டத்தினை நீங்கள் தயவு செய்து வாபஸ் வாங்கி கொள்ளுமாறு மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
மின்சார வாரிய அதிகாரிகள் சொன்னது போல் ரமளானில் 18 தினங்களுக்கு அதிரையில் மின் தடை இல்லாமல் இருந்தது.
ஆனால் கடந்த 2 தினங்களில் இருந்து நோன்பு திறக்கும் நேரங்களிலும்,சஹர் செய்யும் நேரங்களிலும் அதிகமாக மின்தடை செய்யப்பட்டது.
இதே போல நேற்று தராவிஹ் தொழுகை நேரத்திலும் மின் தடை செய்யப்பட்டது.ஏன் இப்படி இந்த புனிதமிக்க காலங்களில் தேவையற்ற மின் தடை செய்கின்றார்கள் என்று தெரியவில்லை.
ரமலான் முடிய இன்னும் 9 நாட்கள் இருக்கின்றன.இந்த 9 நாட்களும் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்.குறிப்பாக பெருநாள் தினத்தன்று மின் தடை செய்வதை முழுமையாக முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்பது ஆதிரை ஒட்டு மொத்த மக்களின் எதிர்பார்ப்பு!!!
இந்த எதிர்பார்ப்பை அதிரை மின்சார வாரியம் சரி செய்யுமா?
Social Plugin