ஃபித்ரா தர்மம் இரண்டு நல்ல நோக்கங்களின் அடிப்படிடையில் கடமையாக்கப்பட்டுள்ளது.
2.தினந் தோறும் பாத்திரத்தை கையில் ஏந்திக் கொண்டு தெருத் தெருவாக உணவு கேட்டுத் திரியும் பரம ஏழைகள் பெருநாள் தினத்தன்றாவது நாம் வழங்குகின்ற ஃபித்ரா தர்மத்தில் நம்மைப் போல் அவர்களும் தங்களுடைய குடும்பத்தார்களுடன் நிம்மதியாக உண்டு புசிப்பதற்கு உதவுகிறது.
நீங்கள் வழங்குகின்ற ஃபித்ராவை முறையாக தேவையுடைய மக்களிடம் தேடிச் சென்று பணமாக கொடுக்காமல் உணவுப் பொருட்களாக வழங்கி உங்களுடைய எண்ணத்தை நிறைவேற்றிக் கொடுக்கின்ற அமைப்பை நீங்கள் அறியவேச் செய்வீர்கள் அதனடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்த காலங்களில் வசூல் செய்த ஃபித்ராவை முறையாக விநியோகித்து அதன் அதிகாரப் பூர்வ இதழாகிய உணர்வில் அதன் வரவு செலவு கணக்குகளை துல்லியமாக வெளியட்டு வருவதை அறிந்து வருகிறீர்கள்.
அதனால் உங்கள் ஃபித்ராவை பெருநாள் தொழுகைக்கு முன்பதாகவே வழங்கி நோன்பு நோற்றிருக்கும் போது செய்திட்ட சிற் சில தவறுகளை இறைவன் மன்னித்திடுவதற்கு தயாராகுங்கள்.
Social Plugin