செங்கோட்டையை அடுத்த வடகரையில் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் மழை வேண்டி 3 நாள் நோன்பிருந்து சிறப்பு தொழுகை நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில் செங்கோட்டையை அடுத்த வடகரையில் முகைதீன் ஆண்டவர் பள்ளி, திப பள்ளி, ரகுமானியபுரம் பள்ளி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த ஜமாத் சார்பில் மழை வேண்டியும், நாட்டின் வளர்ச்சிக்காக 3 நாள் நோன்பு இருந்தனர்.
இன்று காலை ரகுமானியபுரம் மணல் விளைதிடலில் முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு சிறப்பு தொழுகை நடத்தினர். காலை 7 முதல் 9 மணி வரை நடந்த இந்த சிறப்பு தொழுகையை ஒருங்கிணைந்த ஜமா ஆத் தலைவர் அலி தலைமை வகித்தார். இமாம் சாகுல் அமீது ஆலிம் தொழுகை நடத்தினார்.
Social Plugin