Hot Posts

6/recent/ticker-posts

CMP லைனின் அவல நிலைகள் : செவி சாய்க்குமா அதிரை பேரூராட்சி?

பல ஊர் மக்களை வாட்டி வதைத்துவிட்டு இறுதியாக நமதூர் அதிரைக்கு வந்துருக்கிறது  இந்த டெங்கு காய்ச்சல்.இந்த டெங்கு காய்ச்சல் அதிரையில் வேகமாக பரவி வருகிறது.இதற்கெல்லாம் காரணம் தெரு வீதிகளில் இருக்கும் கால்வாய்கள்,குப்பைகள் போன்றவை தான்.

இந்த சாக்கடை கால்வாய்கள் மூலம் கொசுக்கள் அதிகமாக உற்பத்தி ஆகி டெங்கு,மலேரியா போன்ற கொடிய நோய்களுக்கு மக்கள் மக்கள் தள்ளப்படுகின்றனர்.
குறிப்பாக நமதூர் CMP லைன் ஆட்டோ ஸ்டாண்டு அருகில் தான் இந்த சாக்கடை கால்வைகள் திறந்த வெளியாக உள்ளது.திறந்த வெளி சாக்கடை கால்வைகள் இருப்பதனால் கொசுக்களின் தாக்குதல் அதிகமாகி வருகிறது.

கொசுவை ஒழிக்க கொசு மருந்தும் சில தினங்களாக அடிக்கப்பட்டு வந்தது.ஆனால் தற்பொழுது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.புரியாத புதிராக உள்ளது.

இதனை அதிரை பேரூராட்சி கண்டுகொள்ளாமல் இருந்து வருவது வேதனைக்குரிய  விஷயமாக உள்ளது.மக்களின் நலன் கருதி இந்த சாக்கடை கால்வாய்களை சரி செய்தும்,  கற்கள் வைத்து மூடுவதற்கும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அதிரை மக்களின் எதிர்பார்ப்பு.
அதிரை மக்களின் நலன் கருதி இனியாவது செவி சாய்குமா இந்த அதிரை பேரூராட்சி?

அதிரையில் இங்கு தான் கொசுக்களின்  உற்பத்தி இடம் .

MSM நகர் செல்லும் வழியில் குளம் போல் தேங்கி கிடக்கும் சாக்கடை கால்வாய் மற்றும் பல வாரங்களாக அள்ளப்படாமல் இருக்கும் குப்பைகள் .

CMP லேனில் நதி போல ஓடிக் கொண்டிருக்கும் சாக்கடை கால்வாய்.


CMP லேன் ஆட்டோ ஸ்டாண்டு அருகில் உள்ள குண்டும்,குழியுமான சாலை.