கடையநல்லூர் தொகுதியில் நார் மூலம் மரச்சாமான்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க அரசு பரிசீலிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் கேள்விக்கு அமைச்சர்கள் உறுதி
சென்னை, ஆக.12-
சட்டசபையில் நேற்று (11-08-16) தொழிற் துறை மற்றும் சிறு, குறு தொழில் மானியக் கோரிக்கை யின் பதிலுரைக்குப் பிறகு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சித் தலைவரு, கடையல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் பேசியதாவது.
மாண்புமிகு பேரவைத் தலைவர்களே அவர்களே!
தொழில் முன்னேற்றத் திற்காக பல்வேறு அறிவிப்புகளை நமது அமைச்சர் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அதற்கு முதலிலே என்னுடைய பாராட்டுதலையும், வாழ்த் துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திட்டங்கள் எல்லாம் நிறை வேறுவதற்கு அனைவரும் துணை நிற்பார்கள்.
என்னுடைய தொகுதியில் தொழிற்சாலை சம்பந்தமான ஏற்கனவே தீர்மானத்தில் நான் சொல்லியிருந்தேன். தென்னை விவசாயிகள் எல்லாம் அங்கு அதிகமாக சாகுபடி செய்கிறார்கள். அங்கு தென்னை நார்களை தூளாக்கி சீனாவுக்கு அனுப்பி அங்கே அவர்கள் ரசாயனத்தை கலந்து பர்னிச்சர்கள் தயாரிக்கிறார்கள்.
நம்முடைய நாட்டிலே போகக்கூடிய தென்னை நாரின் தூளை அங்கு அ.னுப்பி திரும்பவும் அங்கிருந்து பர்னிச்சராகி இங்கே தான் வருகிறது. அதுபோன்ற ஒரு ஃபாக்டரியை, இன்டஸ்ரியை கேரளாவில் ஆரம்பிப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறார்கள். பல லட்ச ரூபாயில் தென்னை சாகுபடியாகக் கூடிய நம்முடைய நாட்டிலேயே குறிப்பாக எங்கள் தொகுதிக்குட்பட்ட இடத்திலேயே அந்த நார்களை யெல்லாம் ரசாயன முறையில் இங்கே பர்னிச்சராக்கக் கூடிய தொழிற்சாலை துவங்க முயற்சியை எடுக்கலாம்.
புதிய தொழில்களுக்கெல் லாம் நீங்கள் வழி காட்டுவதாக சொல்லியிருக்கின்றீர்கள். அப்பேர்பட்ட ஒரு தொழிற் சாலையை அரசாங்கத்தின் சார்பாக இல்லா விட்டாலும், தனியார்கள் முயற்சிக்கும் போது அனைத்து வகையிலும் நீங்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்ற வேண்டுகோளை உங்களுக்கு வைத்து உங்களுடைய முயற்சிகள் எல்லாம் வெற்றி பெறுவதற்கு என்னு டைய வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர்கள் பேசிய விவரம்:
சிறு மற்றும் குறு, தொழில் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி:கடைய நல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அவர்கள் சொல்லிய அந்தத் தொழிற் சாலை அங்கு அவர் சார்ந்தி ருக்கிற திருநெல்வேலி மாவட்ட தொழில் மையத்தை அணுகினால் அதற்குத் தேவையான நல்ல ஆலோசனை களையும் சொல் வார்கள்.
அரசு சார்பில் முதல்வருடைய அரசு அந்த தொழிலுக்கு தேவையான அரசு மானியங்களை வழங்கி தொழில் தொடங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் என்பதை உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்
தொழில் துறை அமைச்சர் எம்.பி. சம்பத்: தென்னை நார், பைபர் உற்பத்தியில் இந்தியா விலேயே தமிழகம்தான் முதன்மையான இடம் பெற்றுள்ளது என்பதை நான் குறிப்பிட கடமைப்பட்டுள் ளேன்.
இது முதல்வர் அவர்கள் எடுத்த நடவடிக்கையால் ஏற் பட்டுள்ளது. தென்னை நாரை வேல்யூ அடட் பிராடக்ட் ஆக செய்ய வேண்டும் என்று மாண்புமிகு உறுப்பினர் அவர் கள் கேட்டார்கள்.
இதற்கு ஒரு கிளஸ்டர் முறையில் ஒரு தொழிற்சாலையை அமைக்க மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் முன்வருவார்கள் என்றால், அங்கே அமைத்து அதற்குண்டான நடவடிக்கை யில் அரசு மேற்கொள்ளும். அதற்குண்டான அனைத்து சலுகைகளையும் வழங்கும் என உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர்கள் பதில் அளித்தார்கள்.
Social Plugin