அதிராம்பட்டினம், ஜன.29
பேருந்து கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரசு பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் இன்று (ஜன.29) தமிழகமெங்கும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்து இருந்தது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஈடுபட்டனர்.
திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன், திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் K.செல்வம், தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி, மமக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா, காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் தலைவர் எஸ்.கே கார்த்திகேயன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், மனிதநேய மக்கள் கட்சி அதிரை பேரூர் தலைவர் எம். சாகுல் ஹமீது, மமக அதிரை பேரூர் செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதிரை பேரூர் செயலர் என்.காளிதாஸ் உட்பட அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அரசு பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். இதில், 55 பேர் அதிராம்பட்டினம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
Social Plugin