Hot Posts

6/recent/ticker-posts

இந்தியயூனியன் முஸ்லிம்லீக்கின் தேசியத்தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் பேச்சு

எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுகாத்து நாட்டில் அமைதியை நிலைநாட்ட வேண்டும்:
தெற்கே உதித்த திராவிட கொள்கையை வடஇந்தியாவில் எப்போது நாம்
நிலைநிறுத்துகிறோமோ அப்போது தான் கொடுமைகளுக்கு முடிவு காண முடியும்
இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு

தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீடு செய்து பாதுகாத்திட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்துக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (16-04-2018) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசியதாவது:-

இந்தியாவினுடைய உச்சநீதி மன்றம் வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தை நீர்த்துப்போகிற வகையில் அளித்திருக்கிற தீர்ப்பை  திரும்ப பெறக்கோரி இந்தியாவில் வாழக்கூடிய எஸ்.சி.,எஸ்.டி. சமுதாயங்களை சார்ந்த 36 கோடி மக்களுடைய சமூக கண்ணியத்தையும், அந் தஸ்தையும் பாதுகாக்கக்கூடிய வகையில் மத்திய அரசு இதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கோரியும் இந்த சிறப் பான ஆர்ப்பாட்ட கூட்டத்தை தளபதி மு.க. ஸ்டாலின் ஏற்பாடு செய்திருக்கிறார்.

கடந்த ஒரு மாத காலமாக  இந்தியாவிலே உள்ள பல்வேறு மாநிலங்களிலே நடைபெறுகின்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஏறத்தாழ 12 மாநிலங்களிலே நாங்கள் கலந்து கொண்டு எஸ்.சி.,எஸ்.டி. சமுதாய மக்களுடைய கவுரவத்தை பாதுகாக்கக்கூடிய சட்டத்தை நிலைநிறுத்துவற்காக கோரிக்கை வைத்து பல போராட்டங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அந்த வரிசையில் தமிழ கத்திலே தளபதி மு.க ஸ்டாலின் தலைமையில் நடக்கின்ற இந்த ஆர்ப்பாட் டத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சேர்ந்து அதே கோரிக்கையை வலியு றுத்துகிறது.

நான் நீண்ட நேரம் பேசமாட்டேன். மூன்றே செய்திகளை சொல்ல விரும்புகிறேன். 

ஒன்று உச்சநீதிமன்றம் அளித்திருக்கின்ற தீர்ப்பை எதிர்த்து மக்கள் ஒவ்வொரு மாநிலத்திலும், ஊரிலும், தெருவிலும் போராடக்கூடிய ஒரு நிலைமை முதன்முறையாக இந்திய வரலாற்றிலே ஏற்பட்டி ருக்கிறது என்று முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தெரிவித் திருக்கிறார். உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சுதந்திர இந்தியாவிலே முதன் முறையாக நடக்கின்ற மக்களுடைய எதிர்ப்பு, புரட்சி இன்று இந்தியா முழுவதிலும் வெடித்து சிதறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமை தொடருமானால் இந்தியாவில் உள்ள ஜனநாயகத்திற்கு பேராபத்து, இந்தியாவுடைய வரலாற்றிற்கு  மிகப்பெரிய சிதைவு, இந்திய மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என்ற நிலை ஏற்பட்டு விடும் என்ற அடிப்படையிலே தான் இந்த ஆர்ப்பாட்டத்தை இங்கு சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறோம்.
ஆகவே, இதனுடைய கோரிக் கையை உச்சநீதி மன்றமும், மத்திய அரசும் உடனடியாக ஏற்று நடை முறைப்படுத்த வேண்டிய பொறுப்பு, அதன் மூலமாக இந்திய மக்களை அமைதி வழியில் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உச்சநீதி மன்றத்திற்கும், மத்திய அரசிற்கும் இருக்கிறது என்பதை இந்த ஆர்ப்பாட்டம் தெளிவுபடுத்துகிறது.

Itஇரண்டாவது விஷயம் இந்தியாவில் வாழக்கூடிய மக்கள் அவர்கள் எந்த ஜாதி, எந்த மதம், எந்த இனம் என்றிருந்தாலும் எல்லா  மக்களும் ஒரே தாய், தந்தைக்கு பிறந்தவர்கள் என்ற உணர்வு. இந்த உணர்வை வடக்கே உள்ளவர்கள் வகுப்பதற்கு மறந்திருக்கின்ற நிலையில் தெற்கிலே உதித்த திராவிட நெறி ""ஒன்றே குலம், ஒருவனே தேவன்"" ,""யாதும் ஊர், யாவரும் கேளீர்"" ""பிறப்போர்க்கும் எல்லா உயிர்க்கும் "" என்ற இந்த அடிப்படை தத்துவங்களை தமிழகத்திலே நிலை நிறுத்திய இந்த திராவிட பாரம்பரிய கொள்கையை வட இந்தியாவிலே எப்பொழுது நாம் நிலைநிறுத்துகிறோமோ அன்று தான் இத்தகைய கொடுமை களுக்கு ஒரு முடிவு கட்ட முடியும்.

மூன்றாவது மத்தியிலே ஆளக்கூடியவர்களும், மாநிலத்திலே ஆளக்கூடி யவ ர்களும் எந்த பிரச்சினையை பற்றியும் கவலைப்படாமல் தங்களுடைய ஆட்சியைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய வரலாற்றிலே ஒரு அதிசயமான நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. எப்பொழுது பார்த்தாலும் அடுத்த தேர்தலைப் பற்றியே சிந்தித்து, அதைப்பற்றியே விவரித்து, அதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிற ஒரு அரசு மத்தியிலும் இருக்கிறது. மாநிலத்திலும் இருக்கிறது. இப்படிப்பட்ட அரசுகள் நீடிக்கும் வரை இந்த நாடு உறுப்பட போவதில்லை. ஆட்சியும் உறுப்பட போவதில்லை. நாட்டை உறுப்பட, செயல்பட வைக்க வேண்டும் என்று சொன்னால் நல்ல ஆட்சியை மத்தியிலும், மாநிலத்திலும் நிலைநிறுத்த நாம் விரும்பினால் இங்கு இருக்கக்கூடிய மத்தியிலே இருக்கக்கூடிய ஆட்சியையும், மாநிலத்திலே இருக்கக்கூடிய ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்புகின்ற காரியத்தை இங்கே கூடியிருக்கின்ற தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையிலே நாம் அத்தனை பேரும் செய்ய வேண்டும் என்று மூன்று கோரிக்கைகளை வைத்து, இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை வெற்றி பெற  வாழ்த்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நன்றியை தெரிவித்து நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.