அமைச்சரவையில் இரு இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பளித்த தமிழக முதல்வர் தளபதியார் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியினை இந்தியயூனியன் முஸ்லிம்லீக் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே, நவாஸ்கனி எம்பி பராட்டு.
தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வரலாற்று சிறப்புமிகு வெற்றிக்குப்பின், தமிழக முதல்வராக மாண்புமிகு தளபதியார் அவர்கள் அரியணையேற உள்ளார்கள்.
தளபதியார் அமைச்சரவையின் 34 அமைச்சர் பெருமக்களும் இன்று பொறுப்பேற்க உள்ளார்கள் இந்த அமைச்சர்கள் பட்டியலில் இரண்டு சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர்.
செஞ்சி கே.எஸ் மஸ்தான் அவர்கள் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராகவும், ஆவடி சா.மு நாசர் அவர்கள் பால்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்க உள்ளனர்.
மாண்புமிகு தளபதியார் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்து
தளபதி அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிகு செயல்பாடுகளினால் தமிழக இஸ்லாமிய சமூகம் மன மகிழ்ந்துள்ளது.
தொடர்ந்து சமூகநீதி காத்து, அனைத்து மக்களையும் அரவணைத்து, சிறுபான்மை சமூகத்தின் அரணாக நின்று, ஆட்சி செய்வீர்கள் என்ற நம்பிக்கை மேலோங்கியுள்ளது.
அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ள அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும், தமிழக முதல்வர் தளபதி அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
--
கே நவாஸ்கனி,
மாநிலத் துணைத் தலைவர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.
Social Plugin