Hot Posts

6/recent/ticker-posts

லட்சத்தீவு மக்களின் கலாச்சாரம் - தனித்தன்மை பாகாத்திட துனை நிற்போம் இந்தியயூனியன் முஸ்லிம்லீக் ஆர்பாட்டம்


முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் லட்சத்தீவில் கொடுமையான சட்டங்களை திணிக்கும் பரபுல் கோடா படேல் அதிகாரியை மத்திய அரசே திரும்பப் பெற வேண்டி
 இ.யூ.முஸ்லிம் லீக் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த  இணைய வழி வாயிலாக முடிவெடுத்தனர்

இதில் தேசிய பொதுச்செயலாளர்
பி.கே. குஞ்ஞாலிக் குட்டி எம்.எல்.ஏ.வரவேற்று பேசினார் , தேசிய அமைப்புச் செயலாளர்
இ.டி முகமது பஷீர் எம்.பி., தேசிய பொருளாளர்
பி.வி. அப்துல் வஹாப் எம்.பி., சையது சாதிக் அலி சிகாப் தங்கள்,(துணைத் தலைவர்)
அப்துஸ் ஸமத் சமதானி எம்.பி. தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர்
கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் (முன்னாள் எம்.எல்.ஏ),மாநில முதன்மை துணைத்தலைவர் எம்.
அப்துல் ரஹ்மான்(முன்னாள் எம்.பி.), மாநில துணைத்தலைவர்
கே.நவாஸ் கனி, எம்.பி.,
சிராஜ் இப்ராஹிம் சேட், தஸ்தகீர் இப்ராஹிம் ஆகா(கர்நாடகா)
டாக்டர் மத்தீன் கான் (உத்தரபிரதேசம்), பைசல் பாபு(முஸ்லிம் யூத் லீக்) TP அஸ்ரப் அலி (மாணவர் பேரவை), வழக்கறிஞர் முஹம்மது ஷா ஆகியோர்  கூடி போராட்டம் நடத்தவேண்டி முடிவு செய்தனர் அதன்படி இன்று 28 ம் தேதி இன்று  அதிராம்பட்டினம் நகர இந்தியயூனியன் முஸ்லிம்லீக் சார்பாக நகர கட்சி அலுவலகம் எதிரில்  கலை ஆர்பாட்டம் நடைபெற்றது

இந்த ஆர்பாட்டத்திற்கு நகர தலைவர் ஹாஜா நஜ்முதீன் தலமையில்  துணைச் செயலாளர் சேக் அப்துல்லா முன்னிலையில் நடைபெற்றது இந்த ஆர்பாட்டத்திற்கு அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம்லீக் பொறுப்பாளர்கள் மாவட்ட ஊடகவியலாளர் ஏசாகுல் ஹமீது துணைத் தலைவர் எம்,கே,எம், அபூபக்கர், மாவட்ட பிரதிநதி  ஆர், ஜமால் முஹம்மது  மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டு கண்டன கோசம் போட்டனர்