இந்திய அரசியல் வரலாற்றை புரட்டிப்பார்க்கிற போது இந்திய சுதந்திர
போராட்ட காலத்திலும் சரி , சுதந்திரம் பெற்ற பின்பு அரசியல் அமைப்பை கட்டமைத்து இனி வரும் காலங்களில் நாட்டை கொண்டு செலுத்துகிற தேசம் தழுவிய அரசியலில் தமிழக தலைவர்கள் சிலரது பட்டியலில் இன்றளவும் சில தலைவர்கள் போன்ற சிலர் நினைவு கூறப்படுகிறார்கள்.
அப்படி நினைவுகூறத் தக்கோரின் பட்டியலில் நாம் பார்க்க வேண்டிய மற்றுமொரு மாபெரும் மக்கள் தலைவர் கண்ணியமிகு காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள் ஆவார்கள்.
மக்களோடு மக்களாக கலந்து எளிமையாக வாழ்ந்து மறைந்த காயிதே மில்லத்தும் ஒருவர். வாரி இறைத்த செல்வந்த குடும்ப பின்புறத்திலிருந்து வந்தாலும் எப்போதும் எளிமையுடன் வாழ்வதையே மனதார விரும்பி ஏற்றவர் கண்ணியமிகு காயிதேமில்லத்.
அவருடைய நடையையும், உடையையும் பார்ப்பவர்கள் அவர் பெரிய தலைவர் என்பதையே நம்ப மறுப்பார்கள். அந்த அளவில் எளிமை மிகுந்திருக்கும். தனக்கான வாழ்வு என்று எதையும் சிந்திக்காதவராக இருந்தார்.
அவர்களது சுற்று பயணத்தில் அதிராம்பட்டினம் மும் ஒன்று அதிராம்பட்டினம் என்றாலே கண்ணியமிகு காயிதேமில்லத் அவர்களை அதிராம்பட்டினம் அப்போதைய கல்வியாளர்கள் மதிப்போடு காயிதே மில்லத் அவர்களை வரவேற்து உபசரிப்பார்கள்
கண்ணியமிகு காயிதே மில்லத் முஹம்து இஸ்மாயில் சாஹிப் அவர்கள்
15/8/1948 ம் ஆண்டு முஸ்லிம் என்ற தமிழ் தினசரி பத்திரிகை வளர்ச்சிக்கு அதிராம்பட்டினம் வருகை தந்தார்கள்
பின்பு 25/6/1949 ம் ஆண்டு அதிராம்பட்டினம் காதர் முகைதீன் உயர்நிலை பள்ளியை திறந்து வைத்தார்கள் ( அது இப்போது பெண்கள் மேல்நிலை பள்ளியாக உள்ளது)
5/7/1955 ம் ஆண்டு அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி திறப்பு விழாவில் தலமை வகித்தார்கள்
20/1/1956 ம் ஆண்டு புயல் சேத பகுதிகளை சுற்றுப் பயணத்தின் போது அதிராம்பட்டினம் வருகை தந்தார்காள்
30/5/1959 ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் சுற்று பயணத்தின் போதும் அதிராம்பட்டினம் வருகை தந்தார்கள்
27/6/1971 ம் ஆண்டு அதிராம்பட்டினத்தில் நடந்த மீலாது விழா நிகழ்சிக்கு வருகை தந்தபோது அன்றய தினம் அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்கள் அப்போது கண்ணிய மிக்க காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள் அதிராம்பட்டினம் ஏ,எம், சம்சுதீன் ஹாஜியார் அவர்களுடன் அரபாக்கா வீட்டில் தங்கி ஓய்வு எடுத்தார்கள்
அப்போதைய முஸ்லிம்லீக் பேரூராட்சி மன்ற உறுப்பினராக இருந்த அஜ்மீர் ஸ்டோர் எம்,ஏ, முஹம்மது சாலிஹ் ஹாஜியார் அவர்கள் மூலம் பேரூராட்சி யில் மனு கொடுத்து ஆலடித் தெரு என்ற பெயரை ' காயிதே மில்லத் நகர் என்று மாற்றப்பட்டது, அது இன்று வரை காயிதே மில்லத் நகர் என்றே அழைக்கப்படுகிறது
ஆகவே கண்ணியம் நிறைந்த காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களது 126 ம் ஆண்டு பிறந்த நாளில் ஏழைகளுக்கு உணவளித்து துவாச் செய்வோம்
ஆக்கம்
கே,எஸ்,ஏ, அப்துர் ரஹ்மான்
செல்: 9600635009
அதிராம்பட்டினம் நகர முன்னால் செயலாளர்
Social Plugin