Hot Posts

6/recent/ticker-posts

கண்ணிய மிக்க காயிதே மில்லத் பிறந்தாள் அன்று வீடுகளில் கொடி ஏற்றி கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்கு பிரார்த்தனை செய்வோம்தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டாக அறிக்கை



அதிராம்பட்டினம் ஜூன் 02
கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் 136 ம் ஆண்டு  பிறந்த நாள் ஜூன் 5 ம் தேதி அன்று தஞ்சாவூர் தெற்கு மாவட்ட முழுவதும்  வீடுகளில் முஸ்லிம்லீக் கொடி ஏற்றி கொரோனா நோயால் அவதிபடும் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்து ஏழைகளுக்கு  உணவளிக்க வேண்டும் என்று தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹாஜி அப்துல் காதர்  மற்றும் செயலாளர் ஆகியோர்  முஸ்லிம்லீக் நகர நிர்வாகிகளை கேட்டுக்கொண்டனர்

கண்ணியமிகு காயிதேமில்லத் அவர்கள் மியாகான் ராவுத்தர் அவர்களின் மகனாக பிறந்தார். இளமைக்காலத்திலேயே தந்தையை இழந்து அன்னையின் அரவணைப்பில் அவர் வளர்ந்தார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு கல்லூரி பட்டப்படிப்பு தேர்வை புறக்கணித்தார். பின்னர் முஸ்லீம் லீக் அமைப்பில் இணைந்து செயல்பட்டார்.

விடுதலைக்கு பின்னர் டிசம்பர் மாதத்தில் 1948 இல் கராச்சியில் முஸ்லீம் லீக் கட்சி பாகிஸ்தான் பகுதிக்கு ஒன்று என்றும்,இந்தியாவிற்கு இன்னொன்று என்றும் பிரிக்கப்பட்டது. அங்கே பாகிஸ்தான் பகுதியின் தலைவராக திகழ்ந்த லியாகத் அலிகான் ,"உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் காயிதே மில்லத் அவர்களே ! எப்பொழுதும் உதவக்காத்திருக்கிறோம்" என்ற பொழுது ,"எங்களுக்கான தேவைகளை,சிக்கல்களை நாங்களே தீர்த்துக்கொள்வோம். எங்களுக்கு என்று ஒரு தேசமிருக்கிறது. நீங்கள் எங்களுக்கு செய்கிற உதவி ஏதேனும் இருக்குமானால் அது பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள்,சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை பாதுகாப்போடு பார்த்துக்கொள்வது தான் !: என்று கம்பீரமாக சொல்லிவிட்டு  ஒரு உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். . இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதை பொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். . இது எனது தாய் மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன். அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்  என்று கூறினார்

ஆகவே தியாக செம்மல் கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களது 126 ம் பிறந்த நாள் அன்று  தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் பிரார்த்தனை (துவா) செய்யது  தஞ்சை தெற்கு மாவட்டத்தில் உள்ள நகர,கிளைகளில் அனைத்து கொடி கம்பங்களில் கொடி ஏற்றி ஏழை மக்களுக்கு உதவிகளை செய்யவேண்டும் என்று தஞ்சாவூர் தெற்கு மாவட்ட இந்தியயூனியன் முஸ்லிம்லீக் தலைவர் மதுக்கூர் அப்துல்காதர் ஹாஜியார்  மற்றும் செயலாளர் ஜெயினுல் ஆபிதீன் ஆகியோர் கேட்டுக் கொண்டனர்

கண்ணியத்திற்க்குறிய காயிதே மில்லத் அவர்களது 126 ம் ஆண்டு பிறந்த தினத்தில் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் உள்ள ஏழைகளுக்கு மளிகை பொருட்களை வழங்க உள்ளதாக மாவட்ட நிர்வாகிகள் கூறினார்