Hot Posts

6/recent/ticker-posts

தஞ்சை மாவட்ட இஸ்திமாஅதிராம்பட்டினத்தில் நடந்தது. 10, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளிவாசலில்  தஞ்சாவூர் மாவட்ட  இஸ்திமா மாநாடு  ஆக 26,27 வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு தொடங்கி சனிக்கிழமை இரவு இஷா தொழுகை வரை நடைபெற்றது

இந்த மாநாட்டில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு தொடர் சொற்பொழிவு ஆற்தினர்  இதில், இறையச்சம், வாழ்வியல் நெறிமுறைகள், மறுமை வாழ்வு பற்றிய சிந்தனைகள், சிறப்பு பிரார்த்தனை ஆகியவை இடம்பெற்றது

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்க்கும்  மேற்பட்டோர்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்  இதற்கான முன்னேற்பாடு பணிகள் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் தீவிரமாக நடைபெற்றது இதில் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் முதல் மாணவர்கள், தன்னார்வ அமைப்பின் இளைஞர்கள்,உலமாக்கள் ஆகியோர் செய்துவந்தனர்

கொரோனா கிருமி பரவும் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்திமா நடைபெறவில்லை இருப்பினும் பல உலமாக்கல் அவர் அவர் வீடுகளில் இருந்து உலக மக்கள் அனைவருக்கும் பிரார்த்தனைகள் செய்து வந்தனர் அதுபோன்று இன்று இஷா தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டதும் சிறப்பு பிரார்த்தனை (துவா) செய்யப்பட்டது 

இஸ்திமாவில் கலந்து கொல்லும் பொதுமக்களின் வசதிக்காக களிப்பட வசதிகள் மற்றும் தொழுகைக்கு உழு செய்ய வசதியாக ஒரே நேரத்தில்  அதிகமானவர்கள் ஒழு செய்ய வசதியாக பைப் வசதிகளை செய்துள்ளனர்

இந்த இஜ்திமாவிற்கு வருகை தந்தவர்களுக்கு  வசதிக்காக அதிராம்பட்டினம் துலுக்கா பள்ளி வாசலில் அனைத்து வசதிகளை பள்ளியின் முத்தவள்ளி ஹாஜி எம்,எஸ், ஷிஹாபுதீன்  அவர்கள் செய்து இருந்தனர்