2030 க்குள் நாட்டின் 80 % இருசக்கர வாகனங்களும், 40 % பேருந்துகளும், 30 - 70 % நான்கு சக்கர வாகனங்களும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களாக மாறியிருக்கும். அரசின் கொள்கை முடிவுகளும் நிதியாதாரங்களும் அதை நோக்கியே நகர்கின்றன. நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. - நிதி ஆயோக்.
உலகத்தின் போக்கை கணிப்பதில் தான் ஒரு சமூகத்தின் முன்னேற்றம் துவங்குகிறது.
டீசல் பெட்ரோல் வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் முஸ்லிம் வியாபாரிகள் இனிவரும் காலங்களில் மின்சார வாகனங்களுக்கான உதிரிபாகங்களையும் சூரியமின் தகடுகள் (Solar Panels) மற்றும் அவற்றுக்கான உப பொருட்களை தயாரிப்பது குறித்தும் அதிகம் சிந்திக்க வேண்டும்.
EEE / ECE / Mechatronics உள்ளிட்ட பிரிவுகளில் டிப்ளமோ அல்லது பொறியியல் படித்த மாணவர்கள் வேலைதேடி அலைவதையும் வெளிநாட்டிற்கு செல்லும் மனநிலையையும் மாற்றிக்கொண்டு இந்த துறையில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
உலகை ஆட்டுவிக்கப்போகும் மின்வாகன துறையில் அடுத்த 50 ஆண்டுகளுக்கான ஒரு தொழில் நிறுவனத்தை கட்டமைப்பதே என் வாழ்நாள் இலக்கு என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
" Rome wasn't built in a day " என்று சொல்லுவார்கள்.
பொருள் வாங்கி விற்கும் நமது முந்தைய தலைமுறையின் வியாபார மனநிலையிலிருந்து மாறி நவீன தொழில்நுட்ப சாதனங்களை உற்பத்தி செய்வது என்ற நவீனகால தொழில்முறைக்கு படித்த முஸ்லிம் இளைஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
துவக்க காலத்தில் ஏற்படும் நெருக்கடிகளையும் சிரமங்களையும் சகித்துக் கொண்டு அதே துறையில் விடாப்பிடியாக யார் பயணிக்கிறார்களோ அவர்களால் மட்டுமே மகத்தான தொழில் நிறுவனங்களை கட்டமைக்க முடியும்.
அவர்களால் மட்டுமே நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கொடுத்து அவர்களது குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க முடியும்.
-CMN SALEEM
Social Plugin